உலகம்

“உணவின்றி தவிக்கும் மக்கள்; வீதிகளின் போராடினால் சுட்டுத்தள்ள உத்தரவு” : பிலிப்பைன்ஸில் நடக்கும் கொடூரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்களை ராணுவத்தாலும் மற்றும் போலிஸாராலும் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“உணவின்றி தவிக்கும் மக்கள்; வீதிகளின் போராடினால் சுட்டுத்தள்ள உத்தரவு” : பிலிப்பைன்ஸில் நடக்கும் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 53,166 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,014,499 -ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லும்படி அந்நாட்டி அதிபர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர். 2633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். உணவுக்கு வழியில்லாமல் பலபேர் பட்டினிக்கிடக்கின்ற அவல நிலை உருவாகியுள்ளது.

இதனால் அந்நாட்டைச் சேர்ந்த இடதுசாரிகள் ஊரடங்கின் போது மக்களுக்கு அரசு உணவு உள்ளிட்ட பாதிக்காப்பு உதவிகளை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை அந்நாட்டு அரசு செவிசாய்காகதால் மக்களுடன் இனைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஊரடங்கு உத்தரவை மீறும் மக்களை ராணுவத்தாலும் மற்றும் போலிஸாராலும் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, “நான் எதற்கும் தயங்கப்போவதில்லை; ஊரடங்கு உத்தரவை மீறி போராடுபவர்களால் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களைச் சுட்டுக் கொல்லுங்கள். இதுதான் காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு என் உத்தரவு” என தெரிவித்துள்ளார். அவரின் உத்தரவுக்கு அந்நட்டு மக்கள் மிகவும் கண்டனங்கள் தெரிவித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories