உலகம்

சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த பெண் போராளியை தெரியுமா? #InternationalWomensDay

சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில், இந்த தினம் வெறும் கொண்டாட்டத்துக்கானது இல்லை என்பதை உணர்த்தியவர் யார் என்பதை அறிந்துக்கொள்வோம்.

சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த பெண் போராளியை தெரியுமா? #InternationalWomensDay
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி.

இந்த சர்வதேச மகளிர் தினம் வெறும் கொண்டாடப்படுவதற்காக மட்டுமே என தற்போதைய காலகட்டம் இருக்கிறது. ஆனால், அவை முழுக்க முழுக்க ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களது உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பற்பல போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் என்பதே நிதர்சனம். இந்த நாளுக்காக, போராடிய பெண்களில் மிக முக்கியமானவர் கிளாரா ஜெட்கின்.

18ம் நூற்றாண்டில் ஜெர்மனியின் ஓர் கிராமத்தில் பிறந்த இவர், இளம் வயது முதலே பெண்கள் உரிமை மீதும், பெண்கள் நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். ரஷ்யா, போலந்து நாடுகளில் இருந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்து புரட்சிகர சோஷியலிச அமைப்பை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த பெண் போராளியை தெரியுமா? #InternationalWomensDay

அந்த அமைப்பைச் சேர்ந்த ஓசிப் ஜெட்கின் மூலம் கம்யூனிச சித்தாந்தங்களை நன்கு கற்றறிந்தார் கிளாரா. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு இணைந்தனர். 1870ல், சோஷியலிட இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார் கிளாரா. 1878ல் சோஷியலிஸ்ட்டுகளுக்கு எதிராக தடை கொண்டு வந்த ஜெர்மனிய வேந்தர் பிஸ்மார்க், கிளாரா, ஓசிப் ஜெட்கின் உள்ளிட்டோரை அந்நாட்டில் இருந்து வெளியேற்றினார். அதன் பிறகு ஓசிப் ஜெட்கினும், கிளாராவும் பாரிசுக்குச் சென்றனர்.

குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துக்கொண்ட இருவரும் சமூக போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். பிற்காலத்தில் ஓசிப் நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கை ஆனார். பின்னர் 1889ல் ஓசிப் ஜெட்கின் மறைந்த பிறகு தன்னுடைய 2 ஆண் குழந்தைகளுடன் கடுமையான காலகட்டத்தை சந்தித்தார் கிளாரா ஜெட்கின். அந்த சமயத்தில் சர்வதேச மகளிர் மாநாடு 2வது முறையாக பாரிஸ் நகரில் நடைபெற்றது.

அதில், பங்கேற்ற கிளாரா ஜெட்கின் பெண் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், அவர்களின் பிரச்னைகள் குறித்து எட்டுத்திக்கும் ஒலிக்கும் வகையில் பேசியது உலகில் உள்ள அனைத்து பெண் இயக்கங்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. அதன் பின்னர், சோஷியலிஸ்டுகள் மீதான தடையை 1890ல் ஜெர்மனி அரசு நீக்கியதால் கிளாரா மீண்டும் நாடு திரும்பினார்.

சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த பெண் போராளியை தெரியுமா? #InternationalWomensDay

அங்கு, பெண்களுக்கு எதிரான அநீதிகளை வெளிக்கொணர்ந்து, பெண்களும் ஆண்களும் சமூகத்தில் சம அளவில் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என உணர்த்தி பல்வேறு பிரசாரங்களில் ஈடுபட்டார் கிளாரா ஜெட்கின்.

1892ம் ஆண்டு தோழி ரோசா லக்சம்பெர்க் உதவியுடன் தொடங்கிய ‘சமத்துவம்’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். பெண்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த பத்திரிகையின் பிரதிகள் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கிலேயே வெளியானது. காலம் போக போக, 1914ல் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, 1907ம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உலக சோஷியலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், கிளாரா ஜெட்கின், பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என சூளுரைத்திருந்தார். இது அந்த மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேறியது.

சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த பெண் போராளியை தெரியுமா? #InternationalWomensDay

இதன் எதிரொலியாக, தங்களுக்கான வேலை நேரத்தை குறைத்து, ஊதியத்தை உயர்த்தி, வாக்களிக்கும் உரிமையை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி 19ம் நூற்றாண்டின் 1908ம் ஆண்டு மார்ச் 8 (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) அன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த சுமார் 15 ஆயிரம் பெண்கள், மாபெரும் பேரணியை நடத்தினர். இந்த பேரணியைத் தொடர்ந்து பணிந்த அமெரிக்க சோஷியலிஸ்ட் அரசு, அடுத்த ஆண்டே மார்ச் 8ம் தேதியை தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது.

1910ம் ஆண்டு டென்மார்கின் தலைநகரான கோபன்ஹேகனில் உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மகளிர் தினத்தை சிறப்புமிக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி எழுத்துப்பூர்வமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நாளை சர்வதேச மகளிர் தினமாகவும் கொண்டாட வேண்டும் என அப்போது கிளாரா ஜெட்கின், வலியுறுத்தினார். இதனையடுத்து, 1911ம் ஆண்டு முதல் டென்மார்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினமாக மார்ச் 8ம் தேதியை கொண்டாடினர்.

சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த பெண் போராளியை தெரியுமா? #InternationalWomensDay

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ 1975ம் ஆண்டில்தான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், கிளாரா ஜெட்கினின் கோரிக்கை படி 1911ம் ஆண்டை கருத்தில் கொண்டே கடந்த 2011ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் இன்று 109வது சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று உலக அளவில் மகளிர் தினம் அமோகமாக கொண்டாடப்படுகிறதென்றால் அவற்றுக்கெல்லாம் விதை விதைத்தது 1910ம் ஆண்டில் நடைபெற்ற உழைக்கும் பெண்கள் மாநாடுதான் என்பதை இவ்விடத்தில் நினைவுக்கூறவேண்டும்.

banner

Related Stories

Related Stories