உலகம்

கொரோனா பாதிப்பு இருப்பதாக நாடகமாடிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை... ரஷ்யாவில் பரபரப்பு - வைரல் வீடியோ!

தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக நாடகமாடிய இளைஞருக்கு மாஸ்கோ நீதிமன்றம் சிறை தண்டனை கொடுத்துள்ளது.

கொரோனா  பாதிப்பு இருப்பதாக நாடகமாடிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை... ரஷ்யாவில் பரபரப்பு - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலித்து மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது. நாளுக்கு நாள் சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுப்பதற்கோ மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.

அதேபோல, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை வைத்து பலர் வியாபாரத்திலும் இறங்கியுள்ளனர். இதனால், நோய்த் தொற்று பாதிக்காத மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் பரவும் வதந்திகளால் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் உள்ளது என நம்பவைத்து மக்களை பயமுறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாஸ்கோ நகரத்தில் உள்ள மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பயணித்த இருவர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் போன்று பாதுகாப்பு உடை, மாஸ்க் அணிந்து சென்றிருக்கின்றனர். அப்போது திடீரென வாந்தி எடுப்பது போல நடித்து அங்கிருந்த பயணிகளை தெறித்து ஓட வைத்திருக்கிறார் ஒருவர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது போல நடித்தவரை கைது செய்துள்ளது ரஷ்ய போலிஸ்.

விசாரணையில், அந்த இளைஞர் தஜிகிஸ்தானைச் சேர்ந்த Karomatullo Dzhaborov என்றும் அவர் குறும்பு நிகழ்ச்சிக்காக (prank show) அவ்வாறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இளைஞருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயிலில் காரமத்துல்லோ நடத்திய ப்ராங்க் வீடியோக்களையும் ஃபேஸ்புக், யூ-ட்யூப் தளங்களில் இருந்து ரஷ்ய போலிஸ் நீக்கியுள்ளது. ஆனால், ரஷ்யாவின் TASS என்ற செய்தி நிறுவனத்திடம் அந்த வீடியோ இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories