உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறி விமானத்தை தரையிறக்கிய இளைஞர் : விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

Prank Video எடுப்பதற்காக, தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக சக பயணிகளை இளைஞர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறி விமானத்தை தரையிறக்கிய இளைஞர் : விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து வெஸ்ட் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஜமைக்கா நோக்கிப் புறப்பட்டது. விமானம் பறக்கத் துவங்கிய சில மணிநேரங்களிலேயே ஜேம்ஸ் என்ற இளைஞர் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது, தான் சமீபத்தில் தான் சீனாவின் வூஹான் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அச்சமடைந்து அலறத் தொடங்கினர்.

பின்னர், விமானத்தில் இருந்த மருத்துவர்கள் ஜேம்ஸை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தினர். பின்னர், விமானத்தை மீண்டும் தரையிறக்க ஏற்பாடு செய்து ஜேம்ஸையும் மற்ற சக பயணிகளையும் விமானத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

விமான நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டு தயாராக இருந்த மருத்துவக்குழுக்கள் ஜேம்ஸை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது ஜேம்ஸிற்கு வைரஸ் பாதிப்பில்லை என்று தெரியவந்தது. பின்னர் விமான ஊழியர்கள் நடத்திய விசாரணையில் தனக்கு வைரஸ் பாதிப்பில்லை என்று ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த கேமரா மூலம் குறும்பு வீடியோ (Prank Video) பதிவு செய்ய நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

குறும்புக்காக செய்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த சக பயணிகள் கடும் எரிச்சலடைந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பலரும் ஜேம்ஸை கண்டித்ததை அடுத்து, தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories