உலகம்

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை இதுதான்! - அறிவித்தது ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி!

Climate Emergency என்ற பதத்தை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை இதுதான்! - அறிவித்தது ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பருவகால எமர்ஜென்ஸி என்ற வார்த்தையை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக சமீபகாலமாக அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உருவாகியிருக்கும் காலநிலை மாற்றம் பல நாடுகளையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

ஐ.நா உள்ளிட்ட உலக அமைப்புகள் பலவும் காலநிலை மாற்றம் குறித்து கவனம் கொள்ளவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், 'பருவகால எமர்ஜென்ஸி’ (Climate Emergency) என்ற சொல்லை 2019ம் ஆண்டின் மிக முக்கியமான மற்றும் அதிகமான விவாதிக்கப்பட்ட சொற்களில் ஒன்று என ஆக்ஸ்போர்டு அகராதி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை இதுதான்! - அறிவித்தது ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி!

ஆக்ஸ்போர்டு அகராதி, Climate Emergency என்ற சொல்லை “காலநிலை மாற்றத்தை குறைக்க அல்லது நிறுத்த அவசர நடவடிக்கை தேவைப்படும் சூழ்நிலை” என வரையறுத்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் Climate Emergency எனும் வார்த்தையின் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.

இதேபோல, கடந்த 2018ம் ஆண்டில் ‘Toxic' என்ற சொல்லும், 2017ம் ஆண்டில் ‘youthQuake' என்ற சொல்லும் அந்த ஆண்டின் மிகச்சிறந்த வார்த்தைகளாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories