இந்தியா

ஐ.நா பருவநிலை மாற்ற மாநாடு : பொய் சொன்ன மோடி - ஆதாரத்துடன் விளக்கும் சூழலியல் ஆர்வலர்கள் !

ஐ.நா கூட்டத்தில் எரிசக்தி திறனை 2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட்டாக உயர்த்தப் போகிறோம் என மோடி கூறுவது ஏமாற்றும் வேலை என சூழலியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபை தலைமை அலுவலகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது, பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

எங்கள் நாட்டு மக்களுக்கு சமைப்பதற்கு சுத்தமான எரிவாயு சிலிண்டர்களை வழங்கி உள்ளோம் என பெருமிதமாகப் பேசினார். அதுமட்டுமின்றி இயற்கை எரிபொருள் ஆற்றல் உருவாக்கும் எரிசக்தி திறனை 2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட்டாக உயர்த்தப் போகிறோம். மேலும் அதில் இருந்து 450 ஜிகா வாட்டாக உயர்த்த உறுதி எடுத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

ஐ.நா பருவநிலை மாற்ற மாநாடு : பொய் சொன்ன மோடி - ஆதாரத்துடன் விளக்கும் சூழலியல் ஆர்வலர்கள் !

இந்த வாக்குறுதியில் உள்ள குளறுபடியை சூழலியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். மோடி பேசியது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக சூழலியல் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கடந்த 2015-ம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 175 ஜிகா வாட் இலக்கை நிர்ணயித்திருந்தது.

அதாவது புதை படிவ எரிபொருள் ஆற்றலின் பங்கை 175 ஜிகா வாட்டாக இந்தியா அதிகரிக்கும்” என்று பிரதமர் மோடி அப்போது கூறியிருந்தார். 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்ட இலக்கை முடிக்காத நிலையில் மீண்டும் அதே அளவை நிர்ணயித்துள்ளதாக கூறுகிறது.

அப்படியென்றால் இந்த நான்கு வருடங்களில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் "பேச்சு வார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது, உலகம் இப்போது செயல்பட வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகிறார்.

2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட்டாக உயர்த்தப் போகிறோம் என மோடி கூறுவது ஏமாற்றும் வேலையாக தெரிகிறது. ஊருக்கு மட்டுதான் தான் உபதேசமா? பிரதமர் மோடி கூறியதை முதலில் அவர் செயல்படுத்தவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories