உலகம்

ஜிம்பாப்வே நாட்டில் கடும் வறட்சி - 200 யானைகள் பசி, பட்டினியால்உயிரிழப்பு!

ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 200 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. 

ஜிம்பாப்வே நாட்டில் கடும் வறட்சி - 200 யானைகள் பசி, பட்டினியால்உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுவதால் நாட்டின் மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கினர் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

அந்த பஞ்சம், மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. வறட்சி காரணமாக அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில் 2 மாதத்தில் 55 யானைகள் பசியால் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.

ஜிம்பாப்வே நாட்டில் கடும் வறட்சி - 200 யானைகள் பசி, பட்டினியால்உயிரிழப்பு!

இந்த நிலையில் அங்கு அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால் கடுமையான வறட்சி நீடிக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது.

தேசிய பூங்காவில் மற்ற வன விலங்குகளை காப்பாற்றும் நோக்கில் 2000 யானைகள், 10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டக சிவிங்கிகள் ஆகிய விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜிம்பாப்வே நாட்டில் கடும் வறட்சி - 200 யானைகள் பசி, பட்டினியால்உயிரிழப்பு!

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி தேசிய பூங்கா முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விலங்கினங்கள் செத்து மடிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories