உலகம்

“நீயும், நானும் ஓர் அணி” : இளம் சூழலியல் போராளி கிரேட்டாவுடன் கைகோர்த்த பராக் ஒபாமா!

இளம் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க்கை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

“நீயும், நானும் ஓர் அணி” : இளம் சூழலியல் போராளி கிரேட்டாவுடன் கைகோர்த்த பராக் ஒபாமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 16 வயதான இளம் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளாத உலகத் தலைவர்களை கடுமையாகச் சாடினார். மேலும், இந்த கூட்டத்தின் நடுவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்கு வந்தபோது கிரேட்டா, ட்ரம்ப்பை கோபத்துடன் முறைத்த வீடியோ சமீபத்தில் வைரலானது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக வாஷிங்டன் சென்றிருந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இளம் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க்கை சந்தித்துப் பேசினார். பின்னர் அந்த சந்திப்பு குறித்து ஒபாமா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “16 வயதாகும் கிரேட்டா தன்பெர்க் இந்த கிரகத்தின் மிகப் பெரிய வக்கீல். தனது தலைமுறை பருவநிலை மாற்றத்தின் சுமைகளைத் தாங்கவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து, உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பயமில்லாமல் போராடி வருகிறார். இனி வரும்காலம் இவர்கள் போன்ற இளம்தலைமுறையினரால் கட்டமைக்கப்படும்” என அவர் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, ஒபாமா அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், தன்பெர்க்குக்கும் ஒபாமாவுக்கும் இடையிலான சந்திப்பில் கிரேட்டா, காலநிலை மாற்றங்கள் குறித்து கேட்டறிந்தாக கூறுகின்றனர்.

மேலும் அப்போது ஒபாமா கூறியதாவது, “கிரேட்டாவுடன் பருவநிலை மாற்றம் குறித்து போராடும் எல்லோரும் மிகவும் நல்லவர்கள், இந்த இளைஞர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளனர், மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள், இது மிகவும் நல்ல விஷயம்" என்றும், இருவரின் முஷ்டிகளையும் முன்னே வைத்து, “நீயும், நானும் ஓர் அணி” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒபாமா பதவியில் இருந்தபோது சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீர்ப்பதில் காட்டிய முயற்சியை, தற்போதைய அதிபர் ட்ரம்ப் துளியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குறிப்பாக 2017ம் ஆண்டு பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் கூறியதால் கிரேட்டா எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

“நீயும், நானும் ஓர் அணி” : இளம் சூழலியல் போராளி கிரேட்டாவுடன் கைகோர்த்த பராக் ஒபாமா!

மேலும், அந்தச் சந்திப்பின் போது கிரேட்டா கூறியதாவது, “உலகில் இயற்கையை பாதுகாக்க நினைக்கும் இளைஞர்களுக்கு எனது செய்தி ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும், நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் நம்பமுடியாத அளவிற்கு இருக்கிறது, உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கிரேட்டா, வரவிருக்கும் ஐ.நாவின் இளைஞர் பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மேலும், திங்கட்கிழமை நடைபெறும் பருவநிலை மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.

banner

Related Stories

Related Stories