உலகம்

முடிவுக்கு வந்தது எழுச்சிப் போராட்டம் : மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது ஹாங்காங் நிர்வாகம்!

இரண்டு மாதங்களாக ஹாங்காங்கில் நீடித்த மக்கள் போராட்டங்களுக்குக் காரணமான சட்ட மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது எழுச்சிப் போராட்டம் :  மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது ஹாங்காங் நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஹாங்காங் அரசு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது. ஹாங்காங் சீன அரசுடன் சுமுகமான உறவில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில், கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவை கொண்டுவர ஹாங்காங் அரசு முடிவு செய்தது. இதற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி கடந்த இரண்டு மாதங்களாக போராடி வந்தனர்.

முடிவுக்கு வந்தது எழுச்சிப் போராட்டம் :  மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது ஹாங்காங் நிர்வாகம்!

மக்கள் போராட்டத்திற்குப் பிறகு மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இருப்பினும் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories