உலகம்

அமெரிக்காவில் கடலில் பாய்ந்த விமானம்: நடுக்கடலில் தத்தளித்த படி உயிர் தப்பியவர் எடுத்த செல்ஃபி வீடியோ!

அமெரிக்காவில் விமானம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறுக் காரணமாக விமானம் கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் உயிர் தப்பியவர் கடலில் தத்தளித்தபடி செல்ஃபி எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கடலில் பாய்ந்த விமானம்: நடுக்கடலில் தத்தளித்த படி உயிர் தப்பியவர் எடுத்த செல்ஃபி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதுமே சமீபகாலமாக செல்ஃபி மோகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் செல்ஃபி எடுக்க முயற்சித்து பலர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஆனாலும் யாரும் செல்ஃபி எடுக்க தவறுவது இல்லை.

அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. விமானம் விபத்து ஏற்பட்டு, கடலில் தத்தளித்தபடி உயிர் தப்பியவர் எடுத்த செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அருகில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் ஹாப்மூன் வளைகுடா கடல் பகுதியில் சிறிய ரக விமானத்தில் டேவிட் லெஷ் மற்றும் கொய்லா ஆகியோர் பயணித்துள்ளனர். அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் யு.எஸ். கடலோர காவல்படை தகவல் கொடுத்துவிட்டு விமானத்தை கடலை நோக்கி செலுத்தியுள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கியபடி தத்தளித்தார்கள்.

அப்போது டேவிட் லேஷ் கடலில் முழ்கியபடி செல்ஃபி எடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் டேவிட் கடைசி நேரத்தில் கடலில் தத்தளித்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தைரியத்தை எதிர்க்கொண்டதற்காக டேவிட் லேஷ்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories