உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த சீனா | ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஆலோசனை நடத்துகிறது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த சீனா |  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பா.ஜ.க அரசு பிரித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் பாகிஸ்தான், இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இந்தியாவுடனான வர்த்தக மற்றும் வாணிப உறவை முறித்ததாக அறிவித்தது பாகிஸ்தான் அரசு. காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையை கையாண்டுள்ளது எனக் கூறி அண்டை நாடான சீனாவின் உதவியை நாடியுள்ளது.

இதற்காக சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டு ஆதரவளிக்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கைக்கு சீன அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை ஏற்று இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்துகிறது.

banner

Related Stories

Related Stories