உலகம்

தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் ரூபாய் மதிப்பு... ஆசியாவிலேயே பெரும் சரிவைச் சந்தித்து மோசமான சாதனை!

இந்திய ரூபாய் மதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஆசியாவிலேயே மிகவும் வீழ்ச்சி கண்ட பண மதிப்பாக உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய ரூபாய் மதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஆசியாவிலேயே மிகவும் வீழ்ச்சி கண்ட பண மதிப்பாக மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3.2 சதவீதம் சரிவு கண்டுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் இந்திய ரூபாய் மதிப்பு 222 காசுகள் குறைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக டாலருக்கு 71.47 ரூபாயாக வீழ்ந்தது. புதன்கிழமை ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 71.27 ரூபாய் என ஆனது. நேற்று இந்திய சுதந்திர தினத்தையொட்டி அந்நிய செலாவணி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதத்தில் தென் கொரியாவின் வான் (-2.7), பிலிப்பைன்ஸின் பெசோ, (-2.5), சீனாவின் ரென்மின்பி (-2.4), சிங்கப்பூர் டாலர் (-2.3) ஆகியவற்றின் மதிப்பும் இறக்கம் கண்டுள்ளன. ஆனால் இந்திய ரூபாய் மதிப்பு ஆசியாவிலேயே மிக அதிகமாக (-3.2) வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட உயர்வு மற்றும் எண்ணெய் விலையை குறைந்தது ஆகிய காரணிகளும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காப்பாற்றவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியில் மாற்றம் வராமல் இருப்பது, அந்நியச் செலாவணி புழக்கத்தைப் பாதிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

banner

Related Stories

Related Stories