உலகம்

டைனோசர்கள் வெறும் கற்பனைக்கதை அல்ல: உறுதிப்படுத்திய 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு - ஆச்சர்ய தகவல்!

14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் பகுதி பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்படுள்ளது. இது படிம ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டைனோசர்கள் வெறும் கற்பனைக்கதை அல்ல: உறுதிப்படுத்திய 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு - ஆச்சர்ய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டைனோசர் பற்றிய ஆய்வுகள் உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டைனோசர் பற்றி அவ்வப்போது புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. டைனோசர்களின் எலும்பு பாகங்கள், படிமங்களைப் பாதுகாக்க பல நாடுகளின் அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த படிம ஆய்வாளர்கள் சமீபத்தில் டைனோசரின் தொடைப் பகுதி எலும்புத் துண்டை கண்டுபிடித்துள்ளனர். சுமார் இரண்டு மீட்டர் நீளத்தில் அந்த எலும்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். அந்த எலும்புத் துண்டைப் பார்க்கும்போது நீளமான டைனோசர் எலும்பாக இருக்கக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக படிம ஆய்வாளர் ரோனன் அலைன் கூறியுள்ளதாவது, “இந்த எலும்புப் பகுதியைப் பார்க்கும்போது 140 மில்லியன், அதாவது 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த டைனோசர் வகையாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த டைனோசரின் எடை சுமார் 40 டன்னில் இருந்து 50 டன் வரை இருக்கலாம்.

இது தாவரங்களை உண்ணும் டைனோசராக இருக்கக்கூடும். இந்த வகையைச் சேர்ந்த மற்றொரு டைனோசரின் எலும்புகள் இதே பகுதியில் கிடைத்துள்ளது. அது 2.2 மீட்டர் நீளமும், எடை 500 கிலோவாகவும் இருந்தது. தற்போது கிடைத்துள்ள எலும்பை முழுமையாக நிலத்தில் இருந்து எடுத்து, மண்ணை நீக்கினால் 500 கிலோ இருக்கும். இதனை முழுமையாக மண்ணில் இருந்து பிரிக்க ஒரு வாரம் ஆகும்.

இதனை எடுத்துச் செல்வதற்கு பெரிய பளுதூக்கும் வண்டிதேவைப்படும். பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள காங்நாக் என்ற நகரின் திராட்சை தோட்டங்களில் இந்த அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆய்வில் 70 ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2010ம் ஆண்டு, 40 வகை டைனோசர் இனங்களின், 7500க்கும் மேற்பட்ட எலும்பு படிமங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டைனோசர்கள் பற்றி பல கற்பனைகளும், உருவகங்களும் உலவிவரும் நிலையில், இது போன்ற கண்டுபிடிப்புகள் டைனோசர் இனம் இருந்ததற்கான வலுவான ஆதாரங்களாக அமைகின்றன.

banner

Related Stories

Related Stories