உலகம்

பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்ளும் அமெரிக்கா - ஈரான் குற்றச்சாட்டு !

அமெரிக்காவின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதே இல்லை என ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் மஜித் தக்த் ரவாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.

பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்ளும் அமெரிக்கா - ஈரான் குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். பின்னர் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது. இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியது.

மேலும், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததயை அடுத்து அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தினர். இதனால் இருநாடுகளும் பகைமையை மேலும் அதிகரித்துக் கொண்டனர்.

இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்தது. அதனையடுத்து, ஈரானின் ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு டொனால்டு ட்ரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பின்னர் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தாக்குதலுக்கு தயாரான நிலையில், ட்ரம்ப் திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பின்வாங்கியதாக செய்திகள் வெளிவந்தனர்.

பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்ளும் அமெரிக்கா - ஈரான் குற்றச்சாட்டு !

இந்நிலையில், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து, அமெரிக்கா ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கிறது. மறுபுறம் சமாதானம் பேசுவதற்கு கதவுகளை திறந்து வைப்பதாக பொய் பேசுகிறது என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றம் எங்களை கவலை அடைய செய்கிறது, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிடம் வலிறுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அல் ஒட்டாய்பி, இருநாடுகளும் தங்களுக்கு இடையே நிகழும் கருத்துவேறுபாடுகளை களைந்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என வலியுறுத்தினார்.

பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்ளும் அமெரிக்கா - ஈரான் குற்றச்சாட்டு !

இதனையடுத்து, அல் ஒட்டாய்பியின் இந்த கருத்துக்கு, ஐ.நா.வுக்கான ஈரான் தூதர அதிகாரி மஜித் தக்த் ரவாஞ்சி கூறியதாவது,“ஈரான் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை கொடுத்து வருகிறது. அமெரிக்கா இந்த அணுகுமுறை தொடரும் நீடிப்பதால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே கிடையாது” என்றார்.

மேலும் பேசிய அவர், “அமெரிக்கா தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதார தடைகள் ஈரான் மக்கள் மற்றும் நாட்டின் தலைவர்களுக்கு எதிரான விரோத போக்கை காட்டுகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதே இல்லை என்பதையும் காட்டுகிறது” என அவர் இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories