உலகம்

துபாய் விபத்து : பேருந்தில் பயணம் செய்த 10 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி !

துபாயில் நேற்று நிகழ்ந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 இந்தியர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

துபாய் விபத்து : பேருந்தில் பயணம் செய்த 10 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.துபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதிய பேருந்து, நொறுங்கியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு துபாய் ஷேக் ராசித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வரும், 5 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தில் பலியான 10 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ராஜகோபாலன், வாசுதேவன், தீபக்குமார், ஜமாலுத்தீன் மற்றும் திலகன் ஆகியோரின் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து, இந்தியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமனில் நடைபெற்ற ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்குபெற்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories