வைரல்

டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு? - அலறியபடி இருக்கைகள் மீது ஏறிய கூச்சலிட்ட பயணிகள்!

டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் பாம்பு இருந்ததாக சிலர் கூறியதால், பெண்கள் அச்சத்தில் கூச்சலிட்டு களேபரம் செய்தனர்.

டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு? - அலறியபடி இருக்கைகள் மீது ஏறிய கூச்சலிட்ட பயணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி மெட்ரோ ரயிலில் உள்ள பெண்கள் பெட்டி ஒன்றில் நேற்று ஏராளமான பெண்கள் பயணம் செய்தனர். அப்போது, பெட்டியில் பாம்பு இருந்ததாக சிலர் கூறினர்.

இதனால் அச்சமடைந்த பெண் பயணிகள் அலறியபடி இருக்கைகள் மீது ஏறிக்கொண்டனர். மேலும், பயத்தில் துள்ளிக் குதித்து அலறினர். பின்னர் அக்சர்தாம் மெட்ரோ நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெண்கள் பெட்டியில் பாம்பு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், அங்கிருந்த பல்லியை, பெண்கள் பாம்பு என தவறாக புரிந்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனிடையே, ரயிலில் பாம்பு இப்பதாக பெண்கள் அச்சத்தில் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories