வைரல்

போரால் முறிந்த காதல் : ரத்தன் டாடாவின் காதல் கதை இதுதான்!

எல்லா மனிதர்களுக்கும் ஒரு ஆழமான காதல் கதை இருக்கும். அப்படிதான் ரத்தன் டாடாவுக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது.

போரால் முறிந்த காதல் : ரத்தன் டாடாவின் காதல் கதை இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மும்பையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத்தன் டாடா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது, பெண் ஒருவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரது காதலும் ஆழமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டியே கட்டாயத்தால் இந்தியாவுக்கு ரத்தன் டாடா திரும்பி விடுகிறார்.

பின்னர் அப்பெண்ணை, இந்தியா வரவழைத்து திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். ஆனால் அப்போது இந்தியா - சீனா போர் மூண்டுவிடுகிறது. இதனால், அப்பெண் இந்தியா வர மறுத்துவிடுகிறார். போரால் ரத்தன் டாட்டாவின் முதல் காதல் தோல்வியில் மறைந்து விடுகிறது.

பின்னர் பிறகு நடிகை சிமி கரேவாலுடன் ஒரு அன்பான பழக்கம் இருந்தாலும், இவர்களது உறவும் திருமணம் வரை செல்வில்லை. முதல் காதலியை மறக்க முடியாமல் தனது இறுதி வரை இருந்துள்ளார். இதன் காரணமாகவே இவர் தனது இறுதி மூச்சு வரை ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories