பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்திய தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் ’டாடா இண்டிகா' காரை அறிமுகம் செய்து மோட்டார் வாகனத் தொழில்துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டமும், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டமும் பெற்ற ரத்தன் டாடா, 1962 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்தார்.
பின்னர், கடும் நிதி நெருக்கடியில் இருந்த நேஷனல் ரேடியோ & எலக்ட்ரானிக் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். ”தன்னிடம் நிதி நெருக்கட்டியில் உள்ள நிறுவனத்தை கொடுக்கிறார்கள்” என்று அச்சப்படாடல் அதை எப்படி முன்னேற்றுவது என நினைத்து அந்நிறுவனத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதுதான் அவரை டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கவைத்தது. இதன் பிறகு அதிரடியாக புதிய திட்டங்களை உருவாக்கி தனது நிறுவனத்தின் ’டாடா’ என்ற பெயரை உலகம் முழுவதும் பரவச் செய்து முத்திரை பதித்தார். டீ தொடங்கி விமானம் வரை டாடா குழும் கால்பதிக்காத இடமே இல்லை. இவர் போட்ட விதைதான் இன்று டாடா குழுமம் அனைத்திலும் முதலீடுகளை செய்து வருகிறது.
அதேநேரம் தன்னை ஒரு பெரிய தொழிலதிபராக காட்டிக் கொள்ளாமல், எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்து வந்தார். இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை தனது நிறுவனங்களில் அமர்த்தினார்.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் 30 வயதே ஆன சாந்தனு என்ற இளைஞரை உதவியாளராக நியமித்தார். ரத்தன் டாடாவுக்கு நாய்கள் மீது பிரியம் அதிகம். விபத்தில் நாய்கள் சிக்கி உயிரிழக்க கூடாது என சாந்தனு உருவாக்கிய Reflector Collar வடிவமைப்புதான் ரத்தன் டாடாவுடன் இவரை நெருக்கமடைய வைத்தது.
22 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா 2012 ஆண்டில் இருந்து டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார். தனது பங்கில் ஒரு பகுதியை எழை எளிய மக்களின் வளர்ச்சிக்கு அளித்து உதவி வந்துள்ளார்.
இதனால்தான் மற்ற தொழிலதிபர்களை காட்டிலும் ரத்தன் டாடா தனித்துவமாக எல்லோருக்கும் தெரிய காரணமாகும். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.