வைரல்

Insta ரீல்ஸ் மோகம்: ஓடும் காரிலிருந்து மேலே ஏறி சாகசம் செய்த வாலிபர் -வைரல் வீடியோவுக்கு குவியும் கண்டனம்

ஓடும் காரிலிருந்து வாலிபர் ஒருவர் மேலே ஏறி சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Insta ரீல்ஸ் மோகம்: ஓடும் காரிலிருந்து மேலே ஏறி சாகசம் செய்த வாலிபர் -வைரல் வீடியோவுக்கு குவியும் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதைய இணைய உலகில் அனைத்தும் நவீனமாக மாறிவிட்டது. பலரும் மொபைல்போன் இன்டர்நெட் என பலவற்றுக்கும் அடிமையாகி வருகின்றனர். தொடர்புக்காக பயன்படுத்தப்பட்ட பல ஆப்கள் தற்போது பலரும் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் இளைஞர்கள் சாகசம் செய்வது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Insta ரீல்ஸ் மோகம்: ஓடும் காரிலிருந்து மேலே ஏறி சாகசம் செய்த வாலிபர் -வைரல் வீடியோவுக்கு குவியும் கண்டனம்

எனினும் சில நேரங்களில் இந்த சாகசங்கள் அவர்களது உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவித்து வருகிறது. இரயில் முன்பு ரீல்ஸ், நடு சாலையில் ரீல்ஸ் என பலரும் செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது வாலிபர் ஒருவர் ஓடும் காரில், மேலே ஏறி நின்று சாகசம் செய்துள்ளார். அவரது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் யாருமில்லாத பாலத்தில் இந்த வாலிபர் கார் ஓட்டி செல்கிறார். அப்போது ஸ்டியரிங்கை தனியாக விட்டுவிட்டு, அந்த வாலிபர் காரின் மேலே மெதுவாக ஏறுகிறார். பிறகு அந்த காரின் மேலே கையை நீட்டி நின்றுகொண்டிருக்கிறார். அந்த காரும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இதனை அவரை பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த ரீல்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. தொடர்ந்து அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories