வைரல்

Google Mapயை நம்பாதிங்க : பேனர் வைத்த கிராமம் : காரணம் என்ன?

Google Mapயை நம்ப வேண்டாம் என சாலையோரமாகக் குடகு கிராம மக்கள் விழிப்புணர்வு பேனர்களை வைத்துள்ளனர்

Google Mapயை நம்பாதிங்க : பேனர் வைத்த கிராமம் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டுச் செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம்.

இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். இப்படியான நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் Google Mapயை நம்ப வேண்டாம் என சாலையோரமாகக் குடகு கிராம மக்கள் விழிப்புணர்வு பேனர்களை வைத்துள்ளனர். கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

இதனால் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் குடகு மலைப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இப்படி இவர்கள் வரும் போது தாங்கள் செல்லும் இடத்திற்குப் பதிலாகத் தவறான பகுதிக்கு Google Map அழைத்துச் சென்று விடுகிறது.

அதுவும் குறிப்பாக ஒரே கிராமத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வழிதவறி வந்துவிடுகிறார்கள். இதனால் கிராம மக்கள் “கூகுள் தகவல் தவறானது. இந்த சாலை கிளப் மஹிந்திராவுக்கு செல்லும் வழியல்ல’’ என விழிப்புணர்வு பேனர்களைச் சாலையில் வைத்துள்ளனர். தற்போது இந்த விழிப்புணர்வு பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories