வைரல்

தீபாவளி பரிசு - ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் : உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஹரியானாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு விலை உயர்ந்த சொகுசு காரை நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது.

தீபாவளி பரிசு - ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் : உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனது ஊழியர்களுக்குத் தீபாவளி பண்டிகைக்குச் சிறந்த ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதன்படி நீண்ட ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் 12 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விலை உயர்ந்த டாடா பஞ்ச் காரை பரிசாக வழங்கியுள்ளார் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே. பாட்டியா.

இது குறித்துக் கூறும் அவர், "தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு கவுரவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பும் உள்ளது" என தெரிவித்துள்ளார். அதேபோல் அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட கோத்தகிரி பகுதியில் செயல்பட்டு வரும் சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு வாகனத்தைப் பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories