சினிமா

கழுத்தில் காயங்கள் - மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகை : இந்திய திரையுலகம் அதிர்ச்சி!

வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகை ஹுமைரா ஹிமு கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தில் காயங்கள் - மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகை : இந்திய திரையுலகம் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஹுமைரா ஹிமு. இவர் 'டிபி', 'சங்கத்', 'சேர்மன் பாரி', 'பதிகோர்' மற்றும் 'ஷோனேனா ஷீ ஷோனேனா' போன்ற வங்கதேச தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இதையடுத்து 2011ம் ஆண்டு வெளிவந்த அமர் போந்து ரெஷ்ட் திரைப்படத்தில் 'டோரு அப்பா' என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர். இப்படம் அவருக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி கழுத்தில் காயங்களுடன் நடிகை ஹுமைரா ஹிமுவை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

கழுத்தில் காயங்கள் - மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகை : இந்திய திரையுலகம் அதிர்ச்சி!

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஹுமைரா ஹிமுவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இதனால் அவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட சண்டையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகிறார்கள். மர்மமான முறையில் ஹுமைரா ஹிமு உயிரிழந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories