சினிமா

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

இந்த வார ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் குறித்த முழு விவரம் உள்ளே..

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்த வார ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் குறித்த முழு விவரம் உள்ளே..

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> ஜவான் (Jawan) : (பான் இந்தியா)

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் 'ஜவான்'. செப்டம்பர் 7-ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் நவம்பர் 2-ம் தேதி (நேற்று) Netflix தளத்தில் வெளியாகியது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> தமிழ்க் குடிமகன் (Tamil Kudimagan) : தமிழ்

இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் சேரன், லால், எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி வெளியான நிலையில் aha Tamil ஓடிடி தளத்தில் நவம்பர் 3-ம் தேதி (இன்று) வெளியானது

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> ஆர் யூ ஓகே பேபி (Are You Ok Baby?) : தமிழ்

இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் அபிராமி, மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் உருவான இந்த படம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி aha Tamil மற்றும் Amazon Prime Video ஓடிடி தளங்களில் வெளியானது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> ரத்தம் (Raththam) : தமிழ்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியானது. திரில்லர் திரைப்படமான இந்த படம், Amazon Prime Video ஓடிடி தளத்தில் நவம்பர் 3-ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> இறுகப்பற்று (Irugapatru) : தமிழ்

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, சானியா ஐயப்பன், அபர்நதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியான இந்த படம், வரும் நவம்பர் 6-ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> ஸ்கந்தா (Skanda) : தெலுங்கு

ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை பொயப்படி ஶ்ரீனு இயக்கியுள்ளார். கடந்த செப் 28-ம் தேதி வெளியான இந்த படம் நவம்பர் 2-ம் தேதி (நேற்று) Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வெளியானது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான புதுவரவுகள்.. இந்த வார OTT வெளியீடு படங்கள் என்னென்ன ? - பட்டியல் !

=>> ஆர்யா 3 (Aarya 3) : இந்தி - சீரிஸ்

சுஷ்மிதா சென், விகாஸ் குமார், அங்கூர் பாட்டியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள தொடர் தான் (Series) 'Aarya'. ராம் மத்வானி, சந்தீப் மோடி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடர், ஏற்கெனவே 2 பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3-வது பாகம் நவம்பர் 3-ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories