வைரல்

டெல்லி போலிஸ் கன்னத்தில் பளார்.. பட்டப்பகலில் பெண் செய்த காரியத்தால் கதிகலங்கி போன அதிகாரிகள்.. | VIDEO

பெண் ஒருவர் நடுரோட்டில் போலீஸ் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி போலிஸ் கன்னத்தில் பளார்.. பட்டப்பகலில் பெண் செய்த காரியத்தால் கதிகலங்கி போன அதிகாரிகள்.. | VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியில் உள்ள பகுதி ஒன்றில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெண் ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை போலிஸார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அவரை சோதனை செய்த போலிஸ் என்ன சொன்னார் என்று தெரியவில்லை இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி போலிஸ் கன்னத்தில் பளார்.. பட்டப்பகலில் பெண் செய்த காரியத்தால் கதிகலங்கி போன அதிகாரிகள்.. | VIDEO

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரப்பட்ட அந்த பெண் உடனே அந்த காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் அவரை சரமாரியாக தாக்க முற்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த மக்கள் சமாதான படுத்த முயற்சித்தனர். இருப்பினும் அந்த பெண்ணுக்கு கோபம் தணியாமல் அந்த காவலரை வசைப்பாடினார்.

இதையடுத்து அந்த காவலரை திட்டிக்கொண்டே தனது காரை எடுத்து அந்த இடத்தில் இருந்து அந்த பெண் சென்றுவிட்டார். நடு ரோட்டில் பணியில் இருக்கும் காவலரை பெண் தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை பெற்று வருகிறது. இந்த வீடியோவை Ghar Ke Kalesh என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளார்களை கடந்த இந்த வீடியோ பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த் வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

இது சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதா அல்லது, அண்மையில் எடுக்கப்பட்டதா என்ர விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories