வைரல்

ஒரு தந்தையின் பாசப் போராட்டம்.. உயிருக்கு போராடிய மகள் : படகு உருவாக்கிய தந்தை: நெகிழ்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம் அமராவதியில் உயிருக்கு போராடிய மகளைக் காப்பாற்றுவதற்காகச் சிறிய மூங்கில் படகு அமைத்து மகளை ஆற்றைக் கடந்து தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஒரு தந்தையின் பாசப் போராட்டம்..  உயிருக்கு போராடிய மகள் : படகு உருவாக்கிய தந்தை: நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் மன்யம் மாவட்டத்திற்குட்பட்ட ரெப்பா பகுதி. இப்பகுதியில் இருக்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் நாகாவளி ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த ஆற்றைக் கடக்க இப்பகுதி மக்களும் பாலம் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் ஆற்று நீரில் இறங்கித்தான் செல்வார்கள். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் இவர்களால் எங்கும் செல்ல முடியாது. அவசரமாக மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியாது. கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

ஒரு தந்தையின் பாசப் போராட்டம்..  உயிருக்கு போராடிய மகள் : படகு உருவாக்கிய தந்தை: நெகிழ்ச்சி சம்பவம்!

இதனால் ஆற்றைக் கடக்கப் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இவர்களது கோரிக்கை அரசுக்குக் கேட்கவில்லை.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றிலும் அதிகமாக வெள்ளம் சென்றது.

இதனால் கிராம மக்கள் என்ன செய்வதென்று தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமியின் தந்தை ஒரு சிறிய மூங்கில் படகை உருவாக்கி அதில் மகளை ஏற்றி ஆற்றில் இறங்கியுள்ளார். இவருக்குக் கிராம இளைஞர்கள் ஆற்றைக் கடக்க உதவி செய்துள்ளனர். இவர்கள் ஆற்றைக் கடக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories