வைரல்

ஆசையாக ஆற்றில் குதித்த கால்பந்து வீரர்.. முதலையின் பிடியில் சிக்கி நேர்ந்த சோகம்.. - வீடியோ வைரல் !

ஆற்று நீரில் குதித்த கால்பந்து வீரர் ஒருவரை முதலை ஒன்று கவ்வி செல்லும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையாக ஆற்றில் குதித்த கால்பந்து வீரர்.. முதலையின் பிடியில் சிக்கி நேர்ந்த சோகம்.. - வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோஸ்டாரிகா (Costa Rican) நாட்டின் சாண்டா குரூஸ் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜீசஸ் ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் (Jesus Alberto Lopez Ortiz). இவர் சுச்சோ (Chucho) என்று அழைக்கப்படுவார். 29 வயதுடைய இந்த இளைஞர் அங்கே பிரபல கால்பந்து வீரராக உள்ளார். இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது நண்பர் மற்றும் சகோதரியுடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது கானாஸ் (Canas river) என்ற ஆற்றின் மீது அமைந்திருக்கும் பாலத்தில் சென்றுகொண்டிருந்தனர். அந்த ஆற்றில் முதலைகள் உள்ளன. அதனை தெரிந்து அவைகளை காண அனைவரும் சென்றிருந்தனர். அப்போது தண்ணீரை கண்ட அவர், ஆற்றில் குதித்து குளிக்க எண்ணியுள்ளார். ஆனால் உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்து வேண்டாம் என்று தடுக்க முயன்றனர்.

ஆசையாக ஆற்றில் குதித்த கால்பந்து வீரர்.. முதலையின் பிடியில் சிக்கி நேர்ந்த சோகம்.. - வீடியோ வைரல் !

இருப்பினும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி, குளிப்பதற்காக அந்த ஆற்றில் குதித்துள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த முதலை ஒன்று அந்த இளைஞரை கவ்வி கொண்டது. தொடர்ந்து அந்த நபர் அதன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அது விடாமல் அந்த நபரை கொன்று விட்டது. தொடர்ந்து அந்த நபரை விடாமல் முதலை தனது வாயால் கவ்வி நீந்தி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, அந்த இளைஞரின் சடலத்தை மீட்க அதிகாரிகள் அந்த முதலையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories