வைரல்

மேஜை டிராயரில் சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு.. அலறி அடித்து ஓடிய பார் மேனஜர்.. வைரலாகும் புகைப்படம் !

பார் மேனஜரின் மேஜை டிராயரில் பாம்பு ஒன்று படுத்து உறங்கியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேஜை டிராயரில் சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு.. அலறி அடித்து ஓடிய பார் மேனஜர்.. வைரலாகும் புகைப்படம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக சில உயிரினங்கள் மீது நமக்கு பெரிய அளவு பயம் இருக்கும். அதில் முதன்மையான ஒன்றாக பாம்பு உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் சிலரோ அதனை ஈசியாக பிடித்து விளையாடுவர். இன்னும் சிலர் அதனை முத்தமிடுவர் . இப்படி சிலருக்கு பாம்பு என்பது மிகவும் பிடித்த விலங்காக திகழ்கிறது.

சில நேரங்களில் பாம்புகள் தங்களுக்கு தெரியாமல், வீட்டில் மின் விசிறியிலோ அல்லது சமயலறையிலோ அல்லது துணிகளுக்கு இடையிலோ இருக்கும். அந்த வகையில் தற்போது பணியிடத்தில் உள்ள மேஜை ட்ராயருக்குள் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேஜை டிராயரில் சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு.. அலறி அடித்து ஓடிய பார் மேனஜர்.. வைரலாகும் புகைப்படம் !

ஆஸ்திரேலியாவில் உள்ள பார் ஒன்றில் மேனஜர் ஒருவர் இருந்துள்ளார். அவர் பணி முடிந்த பிறகு தனது மேஜையின் ட்ரையரில் பொருள் ஒன்றை வைக்க திறந்துள்ளார். அப்போது அதில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கிடந்துள்ளது. இதனை கண்டதும் அலறி அடித்து அவர் ஓடியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து வன அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து, சுருண்டு படுத்து கிடந்த பாம்பை பிடித்து சென்றனர். இதுகுறித்து நபர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஒரு உள்ளூர் வளாகத்தின் மேலாளர் நாள் முழுவதும் தனது மேசையில் வேலை செய்து கொண்டிருந்தார், நேரம் முடிந்தவுடன் அவர் தனது டிராவைத் திறக்க நேர்ந்தது, உள்ளே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டதும் அவர் பயந்து போனார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது வைரலாகி வருகிறது.

பணி நேரத்தில் பார் மேனஜரின் மேஜை டிராயரில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்து உறங்கியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories