வைரல்

நீங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுறீங்களா?.. அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதுதான்!

30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசினால் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுறீங்களா?.. அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றை உலகத்தில் செல்போன் இல்லாத ஒருவரை நாம் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. உலக மக்கள் தொகையில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் கொரோனா வந்த பிறகு செல்போன் பயன்பாட்டின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் ரீதியாகப் பல பிரச்சனைகள் ஏற்படும், மன அழுத்தம் வரும் என மருத்துவர்கள் என்னதான் எச்சரிக்கை செய்தாலும் நம்மால் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடிவது இல்லை. இதனால் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

நீங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுறீங்களா?.. அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதுதான்!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பல சமூக ஊடகங்கள் வந்த பிறகு நாம் 24 மணி நேரமும் செல்போனை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறோம். இந்நிலையில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசினால் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் குவாங்சோவில் உள்ள தெற்கு மருத்துவப் பல்கலைக்கழகம் 12 ஆண்டுகளாக 2 லட்சத்து 12 ஆயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதில், 37 வயது முதல் 73 வயது வரை உயர் ரத்த அழுத்தம் இல்லாத 2,12,000 பேருக்குக் கடந்த 12 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுறீங்களா?.. அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதுதான்!

இந்த ஆய்வில் 7 % பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக வாரத்தில் 30 மணி நேரம் செல்போனில் பேசியவர்களுக்கு 12% ரத்த அழுத்தம் இருப்பதும், 1 முதல் 3 மணி நேரம் பேசுபவர்களுக்கு 16% ரத்த அழுத்தப் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்போன் கருவிகள் குறைந்த அளவிலான ரேடியோ அலைவரிசை ஆற்றலை வெளிப்படுத்துவதால் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்தும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வு முடிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories