வைரல்

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம்.. சனாதன கும்பலின் கருப்பு பக்கங்களை தோலுரித்த SV.ராஜதுரை! #BookReview

அண்ணல் அம்பேத்கருடைய கோட்பாடுகள் வழிமுறைகள் இன்னொரு பக்கத்திலும், மற்றும் இந்து மகா சபா உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாக இது இருக்கிறது.

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம்.. சனாதன கும்பலின் கருப்பு பக்கங்களை தோலுரித்த  SV.ராஜதுரை! #BookReview
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம்!

சில நூல்களை நாம் படித்தால் நல்லது, சில நூல்களைப் படித்தால் கூடுதல் அறிவு பெறலாம் என்பதையெல்லாம் தாண்டி, சில நூல்களை நாம் படித்தே ஆக வேண்டும் என்று ஒரு பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் இடம்பெறக்கூடிய நூல், எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதியிருக்கிற `இந்து இந்தி இந்தியா’ என்னும் புத்தகம். கொஞ்சம் பழைய புத்தகம்தான்.

`இந்து இந்தி இந்தியா’ என்கிற புத்தகம் 1993-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூல். அதற்குப் பிறகும் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் மிகச் சரியாக இந்தியாவினுடைய சமூக அரசியல் என்னவாக இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம்.. சனாதன கும்பலின் கருப்பு பக்கங்களை தோலுரித்த  SV.ராஜதுரை! #BookReview

இன்றைக்கு இருக்கின்ற திராவிட இயக்கம் மட்டுமில்லாமல் எதிராக இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். வரலாறு ஒரு பக்கத்திலும், அண்ணல் அம்பேத்கருடைய கோட்பாடுகள் வழிமுறைகள் இன்னொரு பக்கத்திலும், மற்றும் இந்து மகா சபா உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாக இது இருக்கிறது.

ஒற்றுமையும் ஒரே மாதிரியும்

இந்தியாவிலே இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினை பற்றிய நுட்பமான பார்வைகள் இந்த நூலைப் படிக்கிறபோது ஒரு மாநில சுயாட்சிக்கான தேவை நம் நெஞ்சில் அப்படியே பதியும். ஏனென்றால், இந்தியாவினுடைய சிறப்பே `வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான். இதனைப் பன்மைத்துவம் (ப்ளூரலிசம் - Pluralism) என்று சொல்லுவார்கள்.

ஆனால், அப்படி அல்லாமல் பல்வேறு விதமான மொழிகள், பல்வேறு விதமான பண்பாடுகள், பல்வேறு விதமான தேசிய இனங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு `ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி’ என்று வருகிற இன்றையப் போக்கு இந்த நாட்டுக்கு எத்தனை எதிரானது.

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம்.. சனாதன கும்பலின் கருப்பு பக்கங்களை தோலுரித்த  SV.ராஜதுரை! #BookReview

இந்த நாட்டுக்குப் பெருமை, `வேற்றுமையில் ஒற்றுமை’தானே தவிர, வேற்றுமை இல்லாத ஒற்றுமை அல்ல. இந்த இரண்டுக்குமே இரண்டுவிதமான சொற்களை எஸ்.வி.ஆர். அந்த நூலிலே பயன்படுத்துவார் `யூனிட்டி’ (unity) என்பது வேறு `யூனிஃ பார்மிட்டி’ (uniformity) என்பது வேறு. ஒன்றாக இருப்பதும் ஒரே மாதிரியாக இருப்பதும் வேறு வேறானவை.

வலிவடையும் இந்தியும் ஆர்.எஸ்.எஸூம் தங்கள் அடையாளங்களை இழக்காமல் தாங்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே இருந்துகொண்டு, மற்றவர்களோடு நட்பாகவும் சமமாகவும் இருப்பது வேறு; தங்களின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, நாம் மற்றவர்களோடு ஒன்றாக இருப்பது வேறு என்பதை மிக அழுத்தமாக இந்த நூல் சொல்கிறது.

குறிப்பாக, இந்தியும் சமஸ்கிருதமும் இந்த நாட்டில் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவிதத்திலும் வலிமை பெறுகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது. நிதித்துறையில் பார்த்தால் இந்தியாவில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவு சமஸ்கிருதத்துக்குக் கொட்டிக் கொடுக்கப்படுகிற நிதி பற்றிய செய்திகளையெல்லாம் இந்தப் புத்தகம் மிக விரிவாக எடுத்துச்சொல்லுகிறது. ஆர்.எஸ்.எஸ். தோற்றம், வளர்ச்சி, அவர்களுடைய கோட்பாடு ஆகியவையும் இந்த நூலைப் படிக்கிறபோது நமக்குப் புரியும்.

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம்.. சனாதன கும்பலின் கருப்பு பக்கங்களை தோலுரித்த  SV.ராஜதுரை! #BookReview

கற்க வேண்டிய நூல்!

சமூகநீதியும் மாநில சுயாட்சி யும்தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்று சொன்னால், அந்த இரண்டைப் பற்றியும் இதில் செய்திகள் நிறைய இருக்கின்றன. அதேபோல மாநில சுயாட்சியின் தேவையை உணர்த்துகிற செய்திகளும் இருக்கின்றன. படிப்பதற்கு எளிமையாக இருக்கிற நூல் என்று சொல்ல இயலாது. ஆனாலும், ஆழ்ந்து கற்க வேண்டிய நூல் என்று இதனைக் குறிப்பிடலாம். படிக்க வேண்டிய நூல் என்று இல்லாமல் கவனமாகக் கற்க வேண்டிய நூல் என்று கூறலாம்.

காலத்துக்கேற்ற வேடம் !

நம் இந்திய நாட்டில், எத்தனையோ மதங்கள் இருக்கின்றன, எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. ஆனால், ஒரே ஒரு மதமும் ஒரே ஒரு மொழியும் மட்டுமே நாடு முழுவதையும் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கே, இங்கு ஜனநாயகம் என்னும் பெயரில் தலைதூக்கி ஆடுவதை இந்நூல் சான்றுகளுடன் விளக்குகிறது.

மேலும், இந்தக் கோட்பாட்டுக்குப் பின்புலமாகவும் தாங்கிப் பிடிக்கும் தூணாகவும் எப்படி பார்ப்பனியம் உள்ளது என்பதை இந்நூல் மூலம் அறியலாம். கிரேக்கத்தில் உள்ள நம்பிக்கையான, வடிவம் மாறும் கடவுள் போல, பார்ப்பனியம் இங்கே காலந்தோறும் தன் வடிவத்தை மாற்றிக் கொள்கிறது. எல்லாக் காலங்களுக்கும் ஏற்றாற் போல வேடம் போடுகிறது. இவற்றை யெல்லாம் மிகத் துல்லியமாக விளக்கிப் பேசும் நூலே, `இந்து இந்தி இந்தியா’.

கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல், இன்றைய இந்திய அரசியல் சூழலில், மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டிய நூலாகவும், பரப்பப்பட வேண்டிய நூலாகவும் உள்ளது!

-வாசிப்போம்

banner

Related Stories

Related Stories