முரசொலி தலையங்கம்

“சமூக நீதியைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” : புகழாரம் சூட்டிய முரசொலி!

இந்தியாவின் ஒளிவிளக்குகள்தான் பெரியாரும், அம்பேத்கரும், ஜோதிராவ் புலேவும். சனாதன, வர்ணாசிரம ஜாதியவாத, மதவாத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்கும் காவல் அரண்கள் இவர்கள் மூவரும் தான்.

“சமூக நீதியைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” : புகழாரம் சூட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெரியார் – அம்பேத்கர் - ஜோதிராவ் புலே!

சமூக நீதியைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்ட சில வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி இருக்கிறார்.

« பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு.

« பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு.

« சிறுபான்மையினர் இடஒதுக்கீடு.

« நீதித்துறையில் இடஒதுக்கீடு.

« இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு.

« சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டதைப் போன்ற இதேபோன்ற குழுக்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்.

“சமூக நீதியைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” : புகழாரம் சூட்டிய முரசொலி!

இதைத் தொடர்ந்து சொன்னதுதான் மிகமிக முக்கியமானது. “தி.மு.க. சார்பில் இன்றைய தலைமுறையினருக்கு சமூகநீதி வரலாற்றை எடுத்துச் சொல்லும் வகையில், Study Circles ஆரம்பித்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும், அவரவர் மாநிலங்களில் தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் - மகாத்மா ஜோதிராவ் புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களில் Study Circles துவங்கி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமூகநீதி பற்றிய புரிதலையும் - விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்” --இதுதான் மிகமிக அழுத்தம் தர வேண்டிய கோரிக்கை ஆகும்.

இந்தியாவின் ஒளிவிளக்குகள்தான் பெரியாரும், அம்பேத்கரும், ஜோதிராவ் புலேவும். சனாதன, வர்ணாசிரம ஜாதியவாத, மதவாத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்கும் காவல் அரண்கள் இவர்கள் மூவரும் தான். 'மகாத்மா' என்று முதலில் அழைக்கப்பட்டவர் ஜோதிராவ் புலே தான். இந்தியாவில் முதன்முதலில் பட்டியலினப் பெண்களுக்கு பள்ளியை 1848 ஆம் ஆண்டு தொடங்கியவர் புலே. தன் மனைவிக்கு கல்வி புகட்டி ஆசிரியர் ஆக்கினார்.

“சமூக நீதியைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” : புகழாரம் சூட்டிய முரசொலி!

பெண்களுக்கான தனிப்பள்ளியை 1851 ஆம் ஆண்டு தொடங்கினார். மாலை நேரப் பள்ளிகளையும் அதிகம் தொடங்கினார். அதனால்தான் 1888 ஆம் ஆண்டே 'மகாத்மா' என்று அவர் அழைக்கப்பட்டார். மனுவின் படி சூத்திரர்களும் பெண்களும் ஒன்று. அதனால் தான் பெண்கள் முன்னேற்றத்தை முதல்படியாக நினைத்தார் புலே. ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வியைப் புகட்டுவதன் மூலமாக சாதிக் கொடுமைகளையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் களைய முடியும் என்று உறுதியாக நம்பினார் புலே.

அவர் உருவாக்கிய அமைப்பு 'சத்ய சோதக் சமாஜ்' ஆகும். அதாவது 'உண்மையைத் தேடுபவர்களின் சமூகம்' என்பதாகும். 'தலித்' என்ற சொல்லை உருவாக்கியவர் இவர் தான் என்கிறார் அறிஞர் ஆனந்த் டெல்டும்டே. இந்த வழித்தடத்தை விரிவும் ஆழமும் படுத்தி, அவர்களுக்கான உரிமைகளைப் பெற அரசியல் சட்ட வழிமுறையையும் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.

“சமூக நீதியைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” : புகழாரம் சூட்டிய முரசொலி!

“யார் இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்த நாட்டின் வரலாற்றை மீண்டும் எழுதுவார்கள்" என்றவர் அவர். கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் - என்பது இவரது புகழ்பெற்ற வரிகள். 'ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்களே தவிர, சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாக இருங்கள்' என்றார் அம்பேத்கர்.

« டாக்டர் அம்பேத்கருக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது.

« எங்கள் இருவர் கருத்தும் பல விஷயங்களில் ஒன்று போலத்தான் இருக்கும்.

« தமிழ்நாட்டின் சிவராஜ், வீரையன் போன்றவர்களையும், அகில இந்திய அளவில் அம்பேத்கரையும் நம்புங்கள்.

« அம்பேத்கர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. - இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அய்யா அவர்கள் இந்தளவுக்கு எந்தத் தலைவரையும் உயர்த்திச் சொன்னது இல்லை. அந்தளவுக்கு வட இந்தியப் பெரியாராக அம்பேத்கரும், தமிழ்நாட்டு அம்பேத்கராக பெரியாரும் வலம் வந்தார்கள்.

“சமூக நீதியைப் பாதுகாக்க வழிகாட்டுதல்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” : புகழாரம் சூட்டிய முரசொலி!

பெரியாரியம் என்பது உலகளாவிய வரையறைகளைக் கொண்டது என்பதை வைக்கம் விழாவில் முதலமைச்சர் அவர்கள் விளக்கி இருக்கிறார்கள். சுயமரியாதை (self-respect), பகுத்தறிவு (rationality), சமதர்மம் (socialism), சமத்துவம் (equality) மானுடப்பற்று (Humanism), ரத்த பேதமில்லை (Non-discrimination based on blood), பால் பேதமில்லை (Non--discrimination based on Gender), சுய முன்னேற்றம் (self development), பெண்கள் முன்னேற்றம் (women empowerment), சமூக நீதி (social justice), மதச்சார்பற்ற அரசியல் (secular politics), அறிவியல் மனப்பான்மை (scientific temper) ஆகிய உலகளாவிய பரப்பைக் கொண்டது பெரியாரியம் என்று வரையறுத்துச் சொல்லி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.

இத்தகைய தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - மகாத்மா ஜோதிராவ் புலே ஆகியோரது சிந்தனைகளை இந்தியா முழுமைக்கும் பரப்புவதே சமூகநீதியைக் காக்கும் என்ற முதலமைச்சரின் வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories