வைரல்

40% இந்தியர்களுக்கு ஆபத்து.. 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் Accenture நிறுவனம்!

Accenture நிறுவனத்தில் இருந்து 19,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

40% இந்தியர்களுக்கு ஆபத்து.. 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் Accenture நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

ஐடி நிறுவனங்களில் மட்டும் இப்படி ஊழியர்கள் பணிநீக்கம் நடப்பது இல்ல. அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்து வருகிறது. மேலும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

40% இந்தியர்களுக்கு ஆபத்து.. 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் Accenture நிறுவனம்!

இந்நிலையில் பிரபல ஐ.டி நிறுவனமான Accentureல் இருந்து 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகள் குறைந்துள்ளதால் இந்த பணி நீக்க நடவடிக்கையை எடுக்கப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தில் 40% இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பணி நீக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் Accenture நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40% இந்தியர்களுக்கு ஆபத்து.. 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் Accenture நிறுவனம்!

தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதால் ஐடி போன்ற மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தலை மீது பணி நீக்கம் என்ற கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது என்ற அச்சதிலேயே வேலைபார்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories