வைரல்

“ஒன்றிய அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை..” : உணவு டெலிவரி செய்யும் இந்திய வீராங்கனை !

சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடிய இந்திய கால்பந்து வீராங்கனை ஒருவர் தற்போது உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒன்றிய அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை..” : உணவு டெலிவரி செய்யும் இந்திய வீராங்கனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பொலாமி அத்திகாரி(24). இவர் இந்திய கால்பந்து அணியின் U16 அளவில் பங்கேற்று இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று விளையாடியுள்ளார்.

இந்நிலையில், பொலாமி சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருப்பது இந்திய வீராங்கனை எனத் தெரிந்ததும் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அந்த வீடியோவில் பொலாமி, “தான் சிறு வயதிலேயே தாயை இழந்து தனியாக வளர்ந்து வந்தேன். 2016ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினேன். எனினும் அந்த தொடரில் இந்தியா 6 வது இடத்தை பிடித்தது.

“ஒன்றிய அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை..” : உணவு டெலிவரி செய்யும் இந்திய வீராங்கனை !

பின்னர் இந்திய திரும்பிய எனக்கு மேற்கு வங்க அரசிடமே, ஒன்றிய அரசிடமோ எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மேலும் வீட்டை நிர்வகிக்க முடியாத சூழல் காரணமாக உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு சென்று, தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கின்றேன். எனக்கும் விளையாட வேண்டும் என்று ஆர்வம் உள்ளது. எனவே யாராது உதவினால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலாமிக்கு பலரும் ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒன்றிய அரசு பொலாமிக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories