வைரல்

சாலையில் பெண்னை தரதரவென்று இழுத்து சென்ற ம.பி போலிஸ்: இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவரைச் சாலையில் போலிஸார் தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் பெண்னை தரதரவென்று இழுத்து சென்ற ம.பி போலிஸ்: இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் உள்ள பாரிகா புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சாஹோப் சிங். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தனது சகோதரியைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் சாஹோப் சிங் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சாஹோப் சிங்கின் தாய் மகளை வெளியே அனுப்பாமல் போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இவர்களுக்கும் போலிஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சாஹோப் சிங் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்போது அவரது தாய் போலிஸாரின் கால்களைப் பிடித்துள்ளார். இதை அடுத்து அந்த காவலர் அவரை சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளார்.

சாலையில் பெண்னை தரதரவென்று இழுத்து சென்ற ம.பி போலிஸ்: இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சம்பவம் ஜனவரி 3ம் தேதி நடந்துள்ளது. பெண்களைச் சாலையில் இழுத்துச் செல்லவில்லை. அவர் தனது கால்களை பிடித்துக் கொண்டார் என என போலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories