வைரல்

காதலுக்கு அவசியம் புரிதலா, விருப்பமா?.. இதை படித்து விட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள்!

ஒரு துளி நேரத்தை இருவருக்கும் பொதுவான தளத்தில் ஒதுக்குவதே காதல்

காதலுக்கு அவசியம் புரிதலா, விருப்பமா?.. இதை படித்து விட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதே போல காதல் என்பது பற்றிய புரிதலும் ஒவ்வொருவருக்கும் மாறும். ஓர் உறவை தேர்ந்தெடுக்க முடிவு செய்கையில் இருவருக்கும் இடையிலான விருப்பமும் காதல் குறித்த புரிதலும் குறைந்தபட்சமாகவேனும் ஒரே தளத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் முரண்பாடுகள் தோன்றும்.

உதாரணமாக படம் பார்க்கும் பழக்கம் கொண்டோரை இணையாக கொண்டிருப்பவர் அவருடன் அமர்ந்து படம் பார்ப்பது 'ஒரே விருப்பம்' என்கிற வகைமை. அப்பழக்கம் இல்லையெனில் படம் பார்க்கும் இணையரை பார்க்க அனுமதித்து தன் வேலையைப் பார்ப்பது 'காதல் குறித்த புரிதல்' என்கிற வகைமை. தான் வாசித்த புத்தகங்களை பற்றி இருவருமாக பேசுவது 'ஒரே விருப்பம்'. வாசிக்கும் அனுபவம் கொண்டவர் தன் வாசிப்பை குறித்து சொல்ல கேட்பது 'காதல் குறித்த புரிதல்'. பகட்டு வாழ்க்கை விரும்பாமல் இருத்தல் 'விருப்பம்'. இணையரின் பகட்டிலிருந்து தான் ஒதுங்கிக் கொள்வதும் அல்லது ஒதுங்க விடுவதும் 'காதல் குறித்த புரிதல்'.

விருப்பம் என்பது சிந்தனையிலும் வளர்ந்த சூழலிலும் இருந்து வருவது. இது பொதுவாக அல்லது ஒரே மாதிரியாக இருக்கும் ஆட்கள் அரிது. சில விருப்பங்கள் ஒன்றுபோல் இருக்கலாம். எல்லா விருப்பங்களும் ஒன்றுபோல் இருக்காது. இருக்கவும் முடியாது. அந்த குறைந்தபட்ச விருப்பங்களில் மட்டும் ஒன்றாக பயணித்து பிற தருணங்களில் கவனத்தையும் நேரத்தையும் இணையருக்கு அளிப்பதே காதல் குறித்த புரிதல்.

காதலுக்கு அவசியம் புரிதலா, விருப்பமா?.. இதை படித்து விட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள்!

முக்கியமாக இந்த விருப்பம், காதல் குறித்த புரிதல் எல்லாம் இருப்பினும் கவனத்தையும் நேரத்தையும் அளிக்காத, அலட்சியமாக நடத்துகிற, இணை காதலுக்கான இணை அல்ல. அது abusive relationship. ஒருவர் மட்டுமே ஓர் உறவில் காதலைத் தக்க வைக்க உழைக்கும் நிலை இருந்தால் நீங்கள் அந்த உறவிலிருந்து வெளியே வருதல் நல்லது. அந்த உறவு உங்களை தீர்ந்து போக வைக்கும். வெறுமைக்கும் கழிவிரக்கத்துக்கும் ஆளாவீர்கள்.

மேலும் காதலிக்காத ஒரு இணையிடம் காதலைப் பொழிவதும் ஒரு வகை abuse-தான். காதலிப்பதற்கான கட்டாயத்தை அவருக்கு ஏற்றுவது அது. ஒருவகை அழுத்தத்தை அது அவருக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். எனவே தேவையின்றி காதல் பொழிவதும் தேவை இருந்து காதல் துளிர்க்க மறுப்பதும் இறந்த உடலுக்கு உயிர் கொடுப்பது போல.

காதலுக்கு அவசியம் புரிதலா, விருப்பமா?.. இதை படித்து விட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள்!

காதலுக்குள் காதல் மட்டுமின்றி சமூகம் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. பொருளாதாரம் இருக்கிறது. இவற்றில் ஒத்த விருப்பம் அல்லது குறைந்தபட்ச ஒத்துழைப்பு திட்டம் கூட இல்லையெனில் ஒருவரை இன்னொருவர் சுரண்டுவதாகவும் ஆதிக்கம் செலுத்துவதாகவுமே அந்த உறவு விரியும்.

வாழ்க்கைகளை படுவேகமாக கரைத்துச் செல்லும் காலச்சக்கரத்தில் நாம் விரும்பும் ஒரு நபருக்காக ஒரு துளி நேரத்தை இருவருக்கும் பொதுவான தளத்தில் ஒதுக்குவதே காதல்! அது கூட இல்லையெனில் அது காதலுறவே அல்ல என அறிக!

banner

Related Stories

Related Stories