வைரல்

மணமகளுக்கு கழுதையை பரிசளித்த குதிரையில் வந்த மாப்பிள்ளை.. Youtuber செய்த காரியத்தின் பின்னணி என்ன ?

பாகிஸ்தானில் திருமணத்தின்போது, மணமகளுக்கு மணமகன் கழுதை ஒன்றை பரிசாக அளித்துள்ளது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மணமகளுக்கு கழுதையை பரிசளித்த குதிரையில் வந்த மாப்பிள்ளை.. Youtuber செய்த காரியத்தின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக புதிதாக மணமுடிக்கும் தம்பதியினர், தனக்கு வரப்போகும் வருங்கால கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அவருக்கு பிடித்தமான பரிசை திருமணத்தின் போது வழங்குவது வழக்கம். அதன்படி பலரும் தங்கள் துணைவருக்கு, பைக், கார், சேலை, நகைகள், பூக்கள், போட்டோக்கள் என பல வகையான பரிசை வழங்குவர்.

ஆனால் இங்கு ஒரு தம்பதியோ, தனக்கு வரப்போகும் வருங்கால மனைவிக்கு திருமணத்தின்போது ஒரு குட்டி கழுதையை பரிசாக அளித்துள்ளார். இதனால் மணமகள் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், மணமகளோ பூரிப்புடன் அந்த கழுதையை கட்டிக் கொண்டார்.

மணமகளுக்கு கழுதையை பரிசளித்த குதிரையில் வந்த மாப்பிள்ளை.. Youtuber செய்த காரியத்தின் பின்னணி என்ன ?

அதாவது பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடியூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அப்போது அஸ்லான், தனது மனைவி வரிஷாவுக்கு ஒரு பரிசு அளிக்க விரும்பியுள்ளார்.

மணமகளுக்கு கழுதையை பரிசளித்த குதிரையில் வந்த மாப்பிள்ளை.. Youtuber செய்த காரியத்தின் பின்னணி என்ன ?

அதன்படி ஒரு கழுதை குட்டியை திருமண நிகழ்ச்சியின்போது Surprise ஆக கூட்டி வந்துள்ளார். பின்னர் அதனை வரிஷாவிடம் கொடுத்தார். இதனை கண்டதும் மணமகள் வருஷா கண் கலங்கி அந்த குட்டி கழுதையை வரவேற்றார். பின்னர் அதனை கொஞ்சினார். இதனை கண்ட சக உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனர்.

மணமகளுக்கு கழுதையை பரிசளித்த குதிரையில் வந்த மாப்பிள்ளை.. Youtuber செய்த காரியத்தின் பின்னணி என்ன ?

இது குறித்து மணமகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வரிஷாவுக்கு கழுதை குட்டிகள் மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் என் சார்பில் திருமண பரிசு இது" என்று பதிவிட்டிருந்தார். மேலும் "குட்டி கழுதையை அதன் தாயிடம் இருந்து பிரிக்கவில்லை. அதுவும் இங்கே தான் இருக்கிறது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மணமகளுக்கு பிடிக்கும் என்பதால் குட்டி கழுதையை தாயிடம் இருந்து பிரிக்காமல் பரிசாக அளித்த மணமகனின் செயல் அனைவர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி அனைவர் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

banner

Related Stories

Related Stories