வைரல்

நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய நாட்டையே உலுக்கிய குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைதை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இந்த துக்க சம்பவம் குன்னூர் மக்கள் அல்லாது நாட்டுமக்களிடையே நீங்காத நினைவலைகளாக இன்றும் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்படர் ஒன்று விபத்தில் சிக்கியதாக முதலில் செய்திகள் வெளியானது. அப்போது பயிற்சி விமானமாக இருக்கும் என நினைத்தனர்.

நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

ஆனால் அடுத்தடுத்த வெளியான தகவல்கள் தான் நாட்டையே உலுக்கியது. முதலில் விபத்திற்குள்ளான விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்தாக தகவல் வெளியாக நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க பிபின் ராவத் சென்றார். இதற்காக இவர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து பிறகு சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து குன்னூருக்கு எம்.ஐ ரக ஹெலிகாப்படரில் பயணம் செய்தார். இவருடன் அவரது மனைவி உட்பட 13 பேர் இருந்தனர். பின்னர் பயிற்சி மையத்தை நெருங்கும் போதுதான் விமான திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்பினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார், ஹவில்தார் சத்பால் ராய், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், ஸ்கட்ரான் லீடர் குல்திப் சிங், ஜூனியர் வாரன்ட் ஆபிஸர் ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் பிரதீப் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆகி உயர்ந்தது.

நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

இந்த விபத்து நடந்த உடனே தமிழ்நாடு அரசு துரிதமாக மீட்புப் பணிகளை வேகப்படுத்தியது. அனைத்து தவிகளையும் செய்து கொடுத்தது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் குன்னூரில் இருந்து விமானம் மூலம் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த துக்க சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

banner

Related Stories

Related Stories