வைரல்

படிக்காமல் TV பார்த்த சிறுவன்.. வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத தண்டனை கொடுத்த பெற்றோர் !

படிக்காமல் டி.வி பார்த்த மகனுக்கு பெற்றோர் அளித்த வித்தியாசமான தண்டனை இணையத்தில் வைரலாகிவருகிறது.

படிக்காமல் TV பார்த்த சிறுவன்.. வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத தண்டனை கொடுத்த பெற்றோர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தொலைக்காட்சி, மொபைல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக நெடுங்காலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சில வீடுகளில் மாணவர்களின் படிப்புக்காக வீட்டில் தொலைக்காட்சி வாங்காத செயல் கூட நடந்துள்ளது.

இந்த நிலையில், படிக்காமல் டி.வி பார்த்த மகனுக்கு பெற்றோர் அளித்த வித்தியாசமான தண்டனை இணையத்தில் வைரலாகிவருகிறது. சீனாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் எப்போதும் படிக்காமல் டி.வி பார்த்துக்கொண்டே இருந்துள்ளார்.

படிக்காமல் TV பார்த்த சிறுவன்.. வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத தண்டனை கொடுத்த பெற்றோர் !

பலமுறை இதுகுறித்து பெற்றோர் சிறுவனை கண்டித்த நிலையில், சிறுவன் ஏதும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் சிறுவனுக்கு பாடம் புகட்ட பெற்றோர் நினைத்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் சிறுவனுக்கு விடியும் வரை உறங்காமல் டிவி பார்க்கவேண்டும் என வித்தியாசமான தண்டனையை பெற்றோர் அளித்துள்ளனர். அதன்படி சிறுவனும் உறங்காமல் டிவி பார்த்த நிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் சிறுவனால் தூங்காமல் இருக்கமுடியவில்லை.

படிக்காமல் TV பார்த்த சிறுவன்.. வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத தண்டனை கொடுத்த பெற்றோர் !

இதன் காரணமாக சிறுவன் உறங்கவேண்டும் என்று கூற அதற்கு பெற்றோர் மறுத்து சிறுவன் தூங்காமல் இரவு முழுக்க கண்காணித்துள்ளனர். தூங்க முடியாமல் சிறுவன் இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக செய்தி இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அந்த பெற்றோரை பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories