வைரல்

நண்பர்களுடன் நடனமாடும்போது சுருண்டு விழுந்த இளைஞர்.. கதறி அழுத குடும்பம்: துக்கவீடான திருமண விழா!

ராஜஸ்தானில் திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் நடனமாடும்போது சுருண்டு விழுந்த இளைஞர்.. கதறி அழுத குடும்பம்: துக்கவீடான திருமண விழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலீம் பாய் ராநவாஸ். உடற்கல்வி ஆசிரியரான இவர் ரனாவாஸில் நடந்த உறவினரின் இல்ல திருமணத்திற்குச் சென்றுள்ளார். அப்போது மனமேடையில் உறவினர்களுடன் பாடலுக்கு சலீம் பாய் நடனமாடிக் கொண்டிருந்தார். பிறகு அனைவரும் மேடையி விட்டு கீழே இறங்கும் போது திடீரென சலீம் பாய் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

நண்பர்களுடன் நடனமாடும்போது சுருண்டு விழுந்த இளைஞர்.. கதறி அழுத குடும்பம்: துக்கவீடான திருமண விழா!

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனால் திருமண வீடு சோக வீடானது.தற்போது சலீம் பாய் நடனமாடும் போதே சுறுண்டு விழுந்து மரணமடையும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களாகவே நடனமாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. மும்பையில் நவராத்திரி விழாவில் கர்பா நடனமாடிய மணீஷ் நராப்ஜி சோனிக்ரா என்பவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு முன்பு ஜம்முவில் நாடக கலைஞர் ஒருவர் மேடையிலேயே உயிரிழந்தார். இப்படி நடனமாடும் போதே அடுத்தடுத்து சிலர் உயிரிழந்துள்ளது பலரையும் பீதியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories