வைரல்

“மார்பக புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்.. வருமுன் காப்போம்” : உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

பெண்கள் பெரிது பாதிக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கவும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

“மார்பக புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்.. வருமுன் காப்போம்” : உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த 2018ம் ஆண்டு தகவலின் படி இந்தியாவில் சுமார் 8 லட்சம் பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாம் உண்ணும் உணவு, பழக்க வழக்கம் போன்ற பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் பெண்கள் பெரிது பாதிக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கவும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

“மார்பக புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்.. வருமுன் காப்போம்” : உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் பரிசோதனையில் மெமோகிராம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மெமோகிராம் சோதனைக்கு பெண்களிடையே விழிப்புணர்வு குறைவின் காரணமாக முற்றிய நிலையிலேயே பலரும் மருத்துவர்களை அணுகுவதால் பாதிப்புகள் அதிகளவு ஏற்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவாக மிகவும் சுலபமான முறையில் "ரத்தப் பரிசோதனை" மூலமே இந்த நோயை கண்டுபிடித்து விட முடியும் என்ற நிலையை கேன்சர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியுள்ளது. இது புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

“மார்பக புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்.. வருமுன் காப்போம்” : உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

இதுகுறித்து சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆராய்ச்சி மைய இயக்குனரும், புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி நிபுணருமான டாக்டர் ராஜ்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், இந்தியாவில் 57% பெண்கள் கேன்சர் செல்கள் நெறிக்கட்டிகளுக்கு பரவிய பின்னே மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதற்கு செலவு அதிகம், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் மார்பகத்தை இழக்க தேவையில்லை, எளிதாக குணப்படுத்திவிடலாம். என்றார். சுமார் 10 ஆண்டுகளாக ஆய்விலிருந்த மார்பக புற்றுநோயினை ஆரம்ப நிலையை கண்டறியும் சோதனையை 450 நபர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“மார்பக புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்.. வருமுன் காப்போம்” : உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

இதில் 218 கேன்சர் உள்ளவர்கள், 203 பேர் இயல்பு நிலையில் உள்ளவர்கள், 15 பேர் மார்பக நோய் சார்புடையவர்கள் என மாதிரிகளை கொண்டு சோதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 80 சதவிகிதம் மார்பகப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது. இதன் இறுதி கட்ட சோதனைக்கு ரூ. 35 லட்சம் ரூபாய் நிதி தேவைப்படுகிறது.

மேலும் இதற்கான காப்புரிமையும் கோரப்பட்டுள்ளது. முழுமையாக சோதனை வெற்றியடையும் பட்சத்தில் 1,000 முதல் 1,500 ரூபாய்க்கு எளிதான மிகக் குறைவான செலவிலேயே பெண்கள் மார்பகப் புற்றுநோய் இருப்பதை எளிதான ரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்” என்றார்

மேலும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தபின் மக்களே எளிதில் சோதனை செய்துகொள்ளும் வகையில் 'கிட்' தயாரிப்பதற்கு சென்னை ஐஐடி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories