வைரல்

எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் : உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !

எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே தனது வளர்ப்பு நாய் கேட்பதாக காட்பாடி இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் : உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வீட்டில் பலரும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிகமாக வீடுகளில் நாய் வளர்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் நாய் நன்றியுடனும், நல்ல துணையாகவும் இருக்கும்.

வீட்டிற்கு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வந்தால் நாய் குறைத்து உரிமையாளருக்குக் காட்டிக் கொடுக்கும். ஏன் வீட்டிற்குள் புகுந்த பாம்புகளைக் கடித்து தனது உரிமையாளர் உயிரைக் காப்பாற்றியது நாய் என்ற செய்தியை நாம் பார்த்து படித்திருப்போம். அந்த அளவிற்கு நாய் நன்றியுடன் இருக்கும்.

எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் : உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !

நகர பகுதிகளில் தங்களின் பாதுகாப்பிற்கு நாய் வளர்க்கப்பட்டால், கிராமங்களில் காட்டு வேலைக்கு செல்பவர்களின் பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்க்கப்படுகிறது. அவர்கள் எங்குச் சென்றாலும் அவர்களுடன் நாயும் பாதுகாப்பாகச் செல்லும்.

இப்படி காட்பாடியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இதற்கு மச்சான் எனவும் பெயர் வைத்துள்ளார். மேலும் மாடு மேய்க்க செல்லும் போது எல்லாம் மச்சான் நாயையும் பாதுகாப்பிற்கு அழைத்துச் செல்வார். நாயும் அவருக்கு உறுதுணையாகச் சென்று வந்தது.

எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் : உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !

இந்நிலையில் திடீரென அந்த நாய் ரமேஷ் உடன் மாடு மேய் செல்லாமல் இருந்துள்ளது. மேலும் எது சொன்னாலும் கேட்காமல் அப்படியே மச்சான் நாய் இருந்தது. ஆனால் நடிகர் தனுஷ் படப் பாடல்களைக் கேட்டால் மட்டும் உற்சாகத்துடன் இருந்துள்ளது.

இதற்கு காரணம் நாய்க்குத் தொடர்ந்து தனுஷ் படப் பாடல்களை போட்டு அப்பகுதி இளைஞர்கள் சிலர் கேட்கவைத்துள்ளனர். இதனால் தனுஷ் பாட்டிற்கு அடிமையான மச்சான் நாய் எந்த வேலை சொன்னாலும் செய்யாமல் தனுஷ் படத்தின் பாடலை மட்டு கேட்டு வருவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் : உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !

மேலும் ரமேஷ், மச்சான் நாய் தனுஷ் படத்தின் பாடலை அமைதியாகக் கேட்கும் வீடியோவையும் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்ட வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories