வைரல்

ராட்சத பள்ளத்தில் சிக்கிய பைக்.. யோகி ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் சாலைகள்!

உத்தர பிரதேச மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளத்தில் இருசக்கர வாகனம் சிக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராட்சத பள்ளத்தில் சிக்கிய பைக்.. யோகி ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் சாலைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலம்தான் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என யோகி தொடர்ச்சியாக பேசி வருகிறார். ஆனால் அது உண்மை இல்லை என்பதை உ.பி சாலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பள்ளங்களே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

அக்டோபர் 7ம் தேதி பெய்த கனமழையில் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விரைவுச் சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி 2021ம் ஆண்டு திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்சத பள்ளத்தில் சிக்கிய பைக்.. யோகி ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் சாலைகள்!

இதையடுத்து வாரணாசி சாலையிலும் பள்ளம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உத்தர பிரதேசத்திலுள்ள சாலைகளின் உண்மையான நிலை இதுதான் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கான்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மீண்டும் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் இருசக்கர வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. இதையடுத்து வாகனத்தை போலிஸார் மீட்டு வெளியே எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் உத்தர பிரதேச மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி இதுதான். இதுவே டெல்லியில் ஏற்பட்டிருந்தால் பா.ஜ.கவினர் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தியிருப்பார்கள்" என இணையவாசி ஒருவர் சமூகவலைதளத்தில் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories