வைரல்

ஆசை ஆசையாக மனைவிக்கு செல்போன் ஆர்டர் செய்த கணவன்: பார்சலை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

நீலகிரியில் ஆன்லைனில் செல்போன் வாங்கியவருக்கு அதற்குப் பதில் கல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை ஆசையாக மனைவிக்கு செல்போன் ஆர்டர் செய்த கணவன்: பார்சலை திறந்தபோது  காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், நீலகிரியில் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு அதற்குப் பதில் பார்சலில் கல் இருந்த சம்பவம் மீண்டும் இ-காமர்ஸ் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை ஆசையாக மனைவிக்கு செல்போன் ஆர்டர் செய்த கணவன்: பார்சலை திறந்தபோது  காத்திருந்த அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் மோதிலால் லட்சுமன். இவர் தனது மனைவிக்காக ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து நேற்று அவர் ஆர்டர் செய்திருந்த செல்போன் பார்சலில் வந்துள்ளது.

இதையடுத்து கணவனும், மனைவியும் பார்சலை ஆசை ஆசையாக திறந்து பார்த்தபோது அதில் தாங்கள் ஆர்டர் செய்திருந்த செல்போனுக்கு பதில் கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து டெலிவரி பாயிடம் அவர்கள் முறையிட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆசை ஆசையாக மனைவிக்கு செல்போன் ஆர்டர் செய்த கணவன்: பார்சலை திறந்தபோது  காத்திருந்த அதிர்ச்சி!
Laurent Delhourme

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மோதிலால் லட்சுமன் தவித்து வருகிறார். ஆசை ஆசையாக மனைவிக்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கல் வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories