வைரல்

ஷூ-விற்குள் இருந்து எட்டிப்பார்த்த நாகப் பாம்பு.. பதறியடித்து ஓடிய வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் ஷூ-வில் இருந்து நாகப்பாம்பு சீறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷூ-விற்குள் இருந்து எட்டிப்பார்த்த நாகப் பாம்பு.. பதறியடித்து ஓடிய வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் மைசூர் நகர், மகாதேவபுரா படாவனே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியில் காலணிகளை வைக்கும் ஸ்டாண் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் இருக்கும் வாலிபர் ஒருவர் வழக்கம்போல் தனது ஷூ-வை எடுத்து காலில் அணியப்பார்த்துள்ளார்.

அப்போது ஷூ-விற்குள் இருந்து பாம்பு ஒன்று எட்டிப்பார்த்த கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது குறித்து பாம்பு பிடி வீரருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த பாம்பு விடி வீரர் ஷூ-விற்குள் இருந்த பாம்பை பிடித்தார்.

அப்போதுதான் இது நாகப்பாம்பு என தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட பாம்பைப் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக இணைய வாசிகளைப் பீதியடைய வைத்துள்ளது.

ஷூ-விற்குள் இருந்து எட்டிப்பார்த்த நாகப் பாம்பு.. பதறியடித்து ஓடிய வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இதுகுறித்து பாம்பு பிடி வீரர் சினேக் மஞ்சு, "வீட்டுக்கு வெளியில் ஷூவை வைப்பவர்கள் மீண்டும் மறுநாள் காலை அந்த ஹூவை அணியும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories