வைரல்

ஆணின் நிர்வாணத்தை விட பெண்ணின் நிர்வாணம் முக்கிய பிரச்சினையாக்கப்படுவது ஏன்?

புத்தனை பொறுத்தவரை நிர்வாணம் ஓர் இயல்பு.

ஆணின் நிர்வாணத்தை விட பெண்ணின் நிர்வாணம் முக்கிய பிரச்சினையாக்கப்படுவது ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நிர்வாணம் என்கிற தன்மை குறித்து பல காலமாக விவாதம் நிகழ்ந்து வருகிறது. புத்தர் மன நிர்வாணத்தைப் பேசினார். அதே போல் உடல் நிர்வாணமும் சரிதான் என்கிற உரையாடலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புத்தர், மகாவீரர் ஆகியோரின் உடல் நிர்வாணம் என்பது அக நிர்வாணத்தின் தொடர்ச்சியாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று முன்வைக்கப்படும் உடல் நிர்வாணம் அக நிர்வாணத்தை கருத்திலேனும் கொண்டிருக்கிறதா?

கடந்த சில நாட்களாக உடல் நிர்வாணம் பற்றிய விவாதங்கள் சமூகதளத்தில் அதிகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்ணின் உடல் நிர்வாணம்!

உடல் நிர்வாணத்தின் மீதான சர்ச்சைக்கான காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் பல கேள்விகள்தாம்.

ஆணின் நிர்வாணத்தை விட பெண்ணின் நிர்வாணம் முக்கிய பிரச்சினையாக்கப்படுவது ஏன்?

நிர்வாணம் என்பது பண்டமா? Is nudity a commodity?

பழங்குடியினரிடம் இருக்கும் நிர்வாண இயல்பு ஏன் சமூகத்தில் இல்லை?

பழங்குடியிடம் வணிகம் இருக்கிறதா?

Porn இருக்கிறதா?

பெண்ணுடல் குடும்பமாகவோ வணிகமாவோ அங்கு ஆக்கப்பட்டதா?

நிர்வாணத்துக்கான demand, supply-யை விட அதிகமாக பழங்குடி சமூகத்தில் ஊதி பெருக்கப்படுகிறதா?

நிர்வாணத்திலும் யாரின் நிர்வாணம் இங்கு விவாதிக்கப்படுகிறது?

ஆணின் நிர்வாணத்தை விட பெண்ணின் நிர்வாணம் முக்கிய பிரச்சினையாக்கப்படுவது எப்படி?

நிலப்பிரபுத்துவம் பூஷித்துக் கொண்டு வந்து கொடுத்த பெண்ணுடல் நிர்வாணத்தை கார்ப்பரெட், வணிகம் ஆக்கவில்லையா?

நிர்வாணம் அகச்சிக்கலா புறச்சிக்கலா?

நிர்வாணம் சுதந்திரம் கொடுக்குமா வணிக லாபம் கொடுக்குமா?

நிர்வாணம் பண்பாட்டு அலகா பொருளாதார அலகா?

நிர்வாணத்தையும் தாண்டி, அளவுகள் எல்லாம் பிரஸ்தாபிக்கப் படுகிறதே, அதற்கு பின்னிருந்து இயக்குவது எது?

பித்தனின் நிர்வாணம் அல்ல இங்கு பிரச்சினை. ஒடுக்கப்படுபவளின் நிர்வாணம் அல்ல இங்கு பிரச்சினை. முதியவளின் நிர்வாணம் அல்ல இங்கு பிரச்சினை. இவைதான் பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக இங்கு பேசப்படும் நிர்வாணம் இச்சையை ஏற்படுத்துவதற்கானது. அதை கட்டமைப்பது யார், குறிப்பிட்ட அந்த நிர்வாணம் மட்டும் சரியென்ற கருத்தை நமக்குள் விதைப்பது யார்?

நிர்வாணம் அசிங்கம் என்பதில் மறைந்திருக்கும் அதே வணிக நலன் நிர்வாணம் அழகு என சொல்வதிலும் ஒளிந்திருப்பது தெரியவில்லையா?

ஆணின் நிர்வாணத்தை விட பெண்ணின் நிர்வாணம் முக்கிய பிரச்சினையாக்கப்படுவது ஏன்?

ஒரு பெண்ணின் தன் உடலை நிர்வாணம் ஆக்கிக்கொள்ளும்போது அவள் விடுதலை அடைவதைக் காட்டிலும் தன்னை பண்டமாக்கிக் கொள்ளும் தன்மையைத்தான் அதிகம் உருவாக்கிக் கொள்கிறாள். ஆணின் நிர்வாணம் இச்சமூகத்துக்கு பொருட்டே அல்ல. பெண்ணின் நிர்வாணம் இங்கு அதிகமாக விவாதிக்கப்படுவதற்குப் பின் கார்ப்பரேட்டின் பாசாங்கு விடுதலை, ஆணாதிக்கம், பாலியல் வறட்சி, நுகருதல் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் எங்கு லாபம் அடையப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் கூட தெரிவதில்லை.

புத்தனை பொறுத்தவரை நிர்வாணம் ஓர் இயல்பு. A state of mind. அங்கு உரையாடுவதற்கோ செயல்படுவதற்கோ ஒன்றும் இல்லை!

banner

Related Stories

Related Stories