உணர்வோசை

கேட்காத செவிகள் கேட்கட்டும்.. ஜாலியன் வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்!

ஜாலியன்வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்கின் பாரம்பரியம்!

கேட்காத செவிகள் கேட்கட்டும்.. ஜாலியன் வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இந்திய விடுதலை என்றதுமே வெள்ளைத் தொப்பிதான் ஞாபகத்துக்கு வரும். காங்கிரஸ், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம், காந்தி என்றெல்லாம் இந்திய விடுதலைக்கான அடையாளங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்திய விடுதலைக்கென இன்னொரு பாரம்பரியம் இருக்கிறது. இன்னொரு தொப்பி இருக்கிறது. முறுக்கு மீசை இளைஞன் அணிந்த வட்டத் தொப்பி. இடதுசாரிய பாரம்பரியம்!

கேட்காத காதுகளுக்கு கேட்கட்டும் என ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் வெடிகுண்டை வீசிய பாரம்பரியம். கப்பற்படையில் ஆங்கிலேயக் கொடியை இறக்கி புரட்சிக்கான அறைகூவலை விடுத்த பாரம்பரியம். இந்திய விடுதலைக்குப் பிறகும் ‘பூரண சுதந்திரமே தேவை’ என அறிவித்தப் பாரம்பரியம்.

ஜாலியன்வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்கின் பாரம்பரியம்!

கேட்காத செவிகள் கேட்கட்டும்.. ஜாலியன் வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்!

ஆறாம் கம்யூனிச அகிலத்துக்கு பகத் சிங் செல்லவிருந்த தருணம் பற்றி மிகக் குறைவாகவே பேசப்பட்டிருக்கிறது. ஜோசப் ஸ்டாலினே மாஸ்கோவுக்கு பகத் சிங் வர விரும்பியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

ஆறாம் அகிலத்தில் பகத் சிங்கின் HRA கட்சி பற்றி பேசப்பட்டிருக்கிறது. மிகச் சரியாக “இந்தியாவின் காந்தியவாதம் முதலிய இயக்கங்கள் தொடக்கத்தில் தீவிரக் குட்டி முதலாளி வர்க்கத்தின் கருத்தியல் இயக்கங்களாக இருந்து பிறகு பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்ததில் முதலாளித்துவ தேசியவாத சீர்திருத்த இயக்கமாக மாறிவிட்டது.

அதற்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் பல குட்டி முதலாளிக் குழுக்களிலிருந்து HRA போன்ற போராளிக் குழு உருவாகியிருக்கிறது. அவை தொடர்ந்து நிலையாக புரட்சிகரப் பார்வையில் இயங்குகிறது,” என்கிற பார்வை முன் வைக்கப்பட்டிருக்கிறது.

கேட்காத செவிகள் கேட்கட்டும்.. ஜாலியன் வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்!

இந்திய விடுதலை பற்றி இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் ஆலோசிக்கும்போது ‘நமக்கான இருப்பை இந்தியத் துணைக் கண்டத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலை அளிக்க வேண்டும்’ எனப் பேசுகிறார்கள். இதைப் பற்றிய சிந்தனை எதற்கும் விடுதலைச் சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. காந்தியே கூட பிரிட்டிஷ்ஷின் ஆட்சிக்குட்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட (Dominion Status) பகுதியாக இந்தியாவை அறிவிக்க வேண்டுமென்றுதான் போராடிக் கொண்டிருந்தார்.

ஆனால் காங்கிரஸ்ஸையும் கூட பூரண சுதந்திரத்துக்கு போராடுமாறு உந்தித் தள்ளியது இடதுசாரிகள்தான். மவுலானா ஹஸ்ரத் மொகானிதான் பூரண சுதந்திரமே தேவை என்கிற கோஷத்தை முதலில் முன் வைத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் இயங்கிய பகத் சிங்கின் இடதுசாரிய பாரம்பரியம் போலவே இன்னொரு பாரம்பரியமும் இருந்தது. பழைய சமூகத்தை மாற்ற விரும்பாமல், சாதிய வருணாசிரம அடுக்குமுறையைக் கட்டிக் காப்பாற்ற விரும்பிய ஆர்எஸ்எஸ் பார்ப்பனியப் பாரம்பரியம்!

கேட்காத செவிகள் கேட்கட்டும்.. ஜாலியன் வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்!

தான் செத்தாலும் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தது இடதுசாரிய பாரம்பரியம். தான் செத்தாலும் எல்லாரும் சாக வேண்டும் என நினைத்தது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய பாரம்பரியம். ஒன்றுக்கும் உதவாத இந்த இரண்டாம் பாரம்பரியம் மொத்த விடுதலை காலத்திலும் ‘கண்மணி அன்போடே’ என பிரிட்டிஷாருக்கு கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தது.

சுதந்திரம் என்பது முழுச் சுதந்திரம் மட்டும்தான். முழுமைக்கும் இம்மி குறைந்தாலும் அது சுதந்திரம் இல்லை. பகத் சிங் பிறந்த தினத்தில் அதை உறுதிப்படுத்துவோம். கேட்காத செவிகள் கேட்கட்டும்!

banner

Related Stories

Related Stories