வைரல்

மக்களுக்கு கோபம் வந்தால்.. இப்போதும் உலகத்திற்கு எடுத்துகாட்டாக இருக்கும் சர்வாதிகாரி முசோலினி மரணம்!

பாசிசத்தை அறிமுகப்படுத்தி ஆட்டம் போட்ட முசோலினியும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

மக்களுக்கு கோபம் வந்தால்.. இப்போதும் உலகத்திற்கு எடுத்துகாட்டாக இருக்கும் சர்வாதிகாரி முசோலினி மரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஏப்ரல் 29, 1945ம் ஆண்டு.

உலகம் இரண்டாம் உலகப் போரில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3 மணி. மரச்சாமான் ஏற்ற பயன்படும் ஒரு மஞ்சள் நிற வாகனம் இத்தாலியின் பியாஸாலே லொரெட்டோ என்கிற பகுதியில் நின்றது. வாகனம் நின்ற இடம் ஐந்து சாலைகள் சந்திக்கும் பகுதி. மிலன் என்கிற இத்தாலி நகரத்தின் வடக்கு பக்கத்தில் இருந்தது. 1919-ம் ஆண்டிலிருந்து அப்பகுதி முக்கியமான வரலாற்றுப் பகுதியாக மாறியிருந்தது. இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் பாசிசம் என்கிற வார்த்தைக்கான வேர் விதைக்கப்பட்ட பகுதி அது.

முன்னாள் பத்திரிகையாளனும் முன்னாள் ராணுவ வீரனுமான முசோலினி அந்த பகுதியில் இருந்துதான் பாசிஸ்ட் கட்சியை உருவாக்கினான். இத்தாலியின் பாசிஸ்ட் கட்சியினருக்கு புனிதத் தளமாக இருந்த பகுதி அது. ஆனால் 1945ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சூழல் மாறியிருந்தது. பாசிசம் உருவாக்கப்பட்ட பகுதி பாசிஸ்டுகளின் அதிகாரத்திலிருந்து பிடுங்கப்பட்டிருந்தது. பாசிசவாதிகளிடமிருந்து அப்பகுதியை மக்களுக்காக கைப்பற்றியிருந்தது கம்யூனிஸ்ட் இயக்கத்தினர்.

மக்களுக்கு கோபம் வந்தால்.. இப்போதும் உலகத்திற்கு எடுத்துகாட்டாக இருக்கும் சர்வாதிகாரி முசோலினி மரணம்!

இத்தாலியின் அப்பகுதியில்தான் மஞ்சள் நிற வாகனம் அந்த அதிகாலைப் பகுதியில் வந்து நின்றது. ஒரு வரலாற்றை முடிவுக்கு கொண்டு வர இருந்தது அந்த அதிகாலைப் பொழுது. மஞ்சள் நிற வாகனத்தின் கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து 18 பேரின் இறந்த உடல்கள் வெளியே தள்ளப்பட்டன. அடைத்துக் கிடந்த உடல்கள் எல்லாவற்றையும் எடுத்து வாகனத்தில் இருந்து வெளியே இருந்த கல் குவியலில் தூக்கிப் போட்டனர். 18 உடல்களில் ஒரு பெண்ணின் உடலும் இருந்தது. யாரெல்லாம் அந்த உடல்கள் என்பது முதலில் தெரியவில்லை. ஆனால் ஒரு முக்கியமான உடல் வெளியே வந்து விழுந்தது. அந்த உடல் என்ன நடக்கிறது என்பதை அறிவித்தது. அந்த உடல் கொண்டிருந்த முகத்தை மொத்த இத்தாலியும் அறிந்திருந்தது. இத்தாலியின் பெரும்பான்மையான மக்கள் வெறுத்த முகம் அது.

உலகையே பாசிசம் என்கிற பெயரில் அச்சுறுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலன் முசோலினியின் முகம் அது.

பொழுது புலர்ந்தது. காலை எட்டு மணி ஆனது. செய்தித்தாள்களுக்கு செய்தி கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் காலை ஏடுகள் ஆட்சியாளரை பற்றி விநோத செய்தியை தாங்கி வந்தது. அதே பாணியிலான செய்தியை ரேடியோக்களும் செய்தியாக்கி வாசித்தன. ஆட்சி என்ற பெயரில் நான்கு மாதங்களுக்கு முன் வரை மக்களை ஒடுக்கிக் கொண்டிருந்த ஆட்சியாளர் இறந்துவிட்டார் என்றும் அவரின் உடல் மக்களின் கோபம் காட்டப்படுவதற்காக பியாஸாலே லொரெடோ பகுதியில் கிடப்பதாகவும் ரேடியா அறிவித்தது. அவ்வளவுதான்.

மக்களுக்கு கோபம் வந்தால்.. இப்போதும் உலகத்திற்கு எடுத்துகாட்டாக இருக்கும் சர்வாதிகாரி முசோலினி மரணம்!

மக்கள் பியாஸாலே லொரெடோ பகுதியில் திரண்டனர். அந்தக் கூட்டம் எதற்கும் அஞ்சவில்லை. காவல்துறையின் கட்டுப்பாடு செல்லுபடியாகவில்லை. தோட்டாக்களை காட்டிலும் மக்கள் சக்தி வலுவாக இருந்தது.

குவியலில் கிடந்த முசோலினியின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. இரண்டு பேர் முசோலினியின் முகத்தில் மிதித்தனர். அவன் அணிந்திருந்த அதிகார முத்திரையை ஒருவர் பிடுங்கி அவன் கையில் குத்தி விட்டார். ஒரு பெண் கையில் துப்பாக்கியுடன் வந்தார். அனைவரையும் விலக்கிவிட்டு, முசோலினியின் தலையில் ஐந்து முறை சுட்டார். தான் இழந்த ஐந்து மகன்களுக்கு பதிலாக ஐந்து முறை முசோலினியை சுட்டதாகக் கூறினார். துணியைப் பற்ற வைத்து முசோலினியின் முகத்தில் போட்டனர். மண்டை உடைக்கப்பட்டது. ஒரு கண் வெளியே விழுந்தது. முசோலினியின் முகத்தில் சிலர் சிறுநீர் கழித்தனர். இன்னொருவர் முசோலினி பிணத்தை தான் கொண்டு வந்திருந்த சாட்டையைக் கொண்டு அடித்தார். மற்றொருவர் ஒரு செத்த எலியை முசோலினியின் வாயில் திணித்து, ‘இப்போ பேசு... முழங்கு’ என திரும்பத் திரும்பக் கோபத்துடன் கத்தினார்.

வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் இருக்கும் விஷயம் ஒன்றுதான். ‘ஆகா ஆகா’வென அகங்காரத்துடன் ஆடிய அத்தனை கொடுங்கோலனும் ‘அய்யோ அய்யோ’ என்றே முடிந்திருக்கிறான். பாசிசத்தை அறிமுகப்படுத்தி ஆட்டம் போட்ட முசோலினியும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

banner

Related Stories

Related Stories