வைரல்

55 வயதில் 5-வது திருமணம்.. கணவரின் திருமணத்தை 7 குழந்தைகளோடு நிறுத்திய மனைவி : உ.பி-யில் நடந்த சம்பவம் !

கணவரின் 5-வது திருமணத்தை 7 குழந்தைகளோடு வந்து தடுத்து நிறுத்திய மனைவியின் செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

55 வயதில் 5-வது திருமணம்.. கணவரின்  திருமணத்தை 7 குழந்தைகளோடு நிறுத்திய மனைவி : உ.பி-யில் நடந்த சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை அடுத்துள்ள சீதாபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சபி அகமது (வயது 55). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், அகமது 5-வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார். அதன்படி தனது மனைவிகளை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அவரது நேரமா என்று தெரியவில்லை, சில உடல்நல பிரச்னையினால், அவரது 2-வது மனைவி மட்டும் யாத்திரைக்குக் செல்லவில்லை. எனவே அவர் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வீட்டிலேயே இருந்தார்.

55 வயதில் 5-வது திருமணம்.. கணவரின்  திருமணத்தை 7 குழந்தைகளோடு நிறுத்திய மனைவி : உ.பி-யில் நடந்த சம்பவம் !

இந்த நிலையில், அகமது கடந்த 2 நாட்களுக்கு முன்பு திட்டமிட்டபடி திருமணம் செய்துகொள்ள தயாரானார். ஆனால் தனது கணவருக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த அகமதுவின் 2-வது மனைவி, தன்னுடன் இருந்த 7 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து தகராறு செய்தார்.

மேலும் தனது கணவர் யாருக்கும் தெரியாமல் 5-வது திருமணம் செய்துகொள்ள தாயாரானதால், ஆத்திரமடைந்த மனைவி ரகளையில் ஈடுபட்டார். இதனால் திருமணம் நடைபெறும் இடம் பரபரத்து காணப்பட்டது. மேலும் இந்த பெண்ணின் குமுறலால் அங்கிருந்த பொதுமக்கள் மணமகன் அகமதுவை சரமாரியாக தாக்கினர். இதனிடையே சம்பவம் பெரிதாக மாற தொடங்கியதால் பயந்த மணமகள் அங்கிருந்து போய்விட்டார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கணவரின் 5-வது திருமணத்தை 7 குழந்தைகளோடு வந்து தடுத்து நிறுத்திய மனைவியின் செயலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories