வைரல்

வகுத்தல் கணக்கு கேட்ட கலெக்டர்.. விழிபிதுங்கிய தலைமை ஆசிரியை.. பதவி போன பரிதாபம் : VIRAL VIDEO !

ஆரம்பப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், தலைமை ஆசிரியையிடம் வகுத்தல் கணக்கு குறித்த கேள்வி கேட்டபோது தவறான பதில் கூறியதால் அவர் அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வகுத்தல் கணக்கு கேட்ட கலெக்டர்.. விழிபிதுங்கிய தலைமை ஆசிரியை.. பதவி போன பரிதாபம் : VIRAL VIDEO !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமப்புரத்தில் ஆரம்பப்பள்ளிக்கு அம்மாவட்ட கலெக்டர் கிரிஷ் குமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு பள்ளியின் நிலை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வழி, மாணவர்களின் அறிவாற்றல் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார்.

அப்போது ஒரு வகுப்பில் தலைமை ஆசிரியை சோனா தர்வே மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கலெக்டர் மாணவர்களிடம் '411-ஐ 4 ஆல் வகுக்கச் சொல்லியுள்ளார். மாணவர்களுக்கு சரி வர தெரியவில்லை என்பதால் அதனை ஆசிரியரை செய்ய சொல்லியுள்ளார்.

ஆனால் தலைமை ஆசிரியையோ அதனை தவறாக செய்துள்ளார். பின்னர் இது சரியா என்று கலெக்டர் மாறி மாறி கேள்வி கேட்க, இதில் திகைத்து போன ஆசிரியர் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். இதையடுத்து கோபப்பட்ட கலெக்டர், ஒரு சிறிய கணக்கு கூட போட தெரியாத நீங்கள் மாணவர்களுக்கு எப்படி சரியாக கற்றுக்கொடுக்க முடியும் என்று திட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கல்வித்துறையின் மூலம் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவரை விலக்கியதோடு, ஊதிய உயர்வையும் நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையல், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

banner

Related Stories

Related Stories