வைரல்

“பாலியல் படங்கள் மட்டும் தேடும் இடமா ‘Dark web’?” : வெப்சைட்டில் வரும் விளம்பரம் பற்றி Decord தெரியுமா ?

நீங்கள் ஒரு ஷாப்பிங் சைட்டில் போய், உங்களுக்கு விருப்பமான பொருட்களை நோட்டம் விட்டால் போதும். அதற்கு பிறகு எந்த வெப்சைட்டுக்கு நீங்கள் சென்றாலும் நீங்கள் பார்த்த பொருட்களின் விளம்பரம் வரும்.

“பாலியல் படங்கள் மட்டும் தேடும் இடமா ‘Dark web’?” : வெப்சைட்டில்  வரும் விளம்பரம் பற்றி Decord தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இணைய வலை :

Online வர்த்தகத்தில் retargeting என ஒரு உத்தி உண்டு. நீங்கள் ஒரு ஷாப்பிங் சைட்டில் போய், உங்களுக்கு விருப்பமான பொருட்களை நோட்டம் விட்டால் போதும். அதற்கு பிறகு எந்த வெப்சைட்டுக்கு நீங்கள் சென்றாலும், porn வெப்சைட்டுக்கு சென்றாலும், அங்கு ஷாப்பிங் சைட்டில் நீங்கள் பார்த்த பொருட்களின் விளம்பரம் வரும்.

பேருந்து, விமானம் அல்லது seasonal pricing உள்ள ஒரு சேவையை ஒருமுறை சென்று பார்த்தால் போதும். அதுதான் உங்கள் விருப்பம் என தகவல் சேகரிக்கப்படும். உதாரணத்துக்கு, வெள்ளிக்கிழமை sale முடியப்போகும் ஒரு பொருளை, வியாழன் வாங்கினால் என்ன விலை இருக்கும் என செக் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வியாழன் அன்று அப்பொருளை வாங்க போகிறீர்கள் என்ற தகவல் சேமிக்கப்படும். பிற்பாடு தொடர்ந்து அந்த வெப்சைட்டுக்கு சென்று பார்ப்பீர்கள். அந்த தகவல்களும் சேமிக்கப்படும். நீங்கள் வியாழன் அன்று நிச்சயமாக வாங்க போகிறீர்கள் என தகவல் உருவாகிவிடும். குறிப்பிட்ட அந்த வியாழன் அன்று நீங்கள் அப்பொருளை நீங்கள் பார்க்கும்போது முன்பு பார்த்ததைவிட விலை ஏறி இருக்கும். வேறு வழியில்லாமல் வாங்குவீர்கள்.

Flash sale என ஒரு உத்தி. அனைவருக்கும் தெரிந்திருக்கும். பாகுபலி படம் போல படுபயங்கரமான மார்க்கெட்டிங் இருக்கும். குறிப்பிட்ட நாள் அன்று இன்ன நேரத்தில் மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்கப்பட்டு, இன்ன நேரத்தில் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கும். அதற்காக முன்பதிவு எல்லாம் செய்வீர்கள்.

குறிப்பிட்ட நாளில் சென்று ஆன்லைனில் நீங்கள் வாங்க விழையும்போது, சில மணித்துளிகளிலேயே பொருட்கள் விற்று தீர்ந்துவிடும். உங்களின் முன்பதிவு விவரங்கள் எல்லாம் என்னவென நினைக்கிறீர்கள்? தகவல்தான். இன்னும் எத்தனை போன்களை உருவாக்கினால் அடுத்த sale-ல் விற்க முடியும் என்பது அந்த மொபைலை உருவாக்கும் முன்பே தயாரிப்பவனுக்கு தெரிந்துவிடும். அதன் மேல், புது மொபைலுக்கான மார்க்கெட்டிங்கை சேர்த்து அதன் வழி வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் கணக்கு செய்யப்படும். Safe bet அவனுக்கு!

இப்படி cyber வழியாக ஏகாதிபத்தியம் வழிகோலும் வாய்ப்புகள் எத்தனை எத்தனை? நமக்கு தோன்றி பொருளை வாங்கும் காலம் போய், நமக்கென்ன பொருள் வேண்டும் என்ற விருப்பத்தையே தயாரிப்பவன் தயாரிக்கிறான். He manufactures our need and our consent.

Dark web அல்லது Deep web என்பது நாம் பார்க்கும் இணையம் அல்லாத இணையம். பல குற்றங்கள் நடந்தேறும் இடம். குற்றங்கள் மட்டும் அல்ல, அரசை தோலுரிக்கும் வேலைகளுக்கான முஸ்தீபுகள் நடக்கும் இடமும் அதுதான். அமெரிக்க அரசின் அந்தரங்கத்தை அங்குள்ள deep web-ம் ஹேக்கர்களும் தெரிந்திருக்கிறார்கள். இதுவரை அங்கு சென்றிராததால், நம்மூரில் எப்படி என தெரியவில்லை. இன்னும் பாலியல் படங்கள் மட்டும் தேடும் இடமாக இங்கு அது இருக்கலாம். ஆனால் அதன் முழு சக்தியை தெரிந்து கொண்டால் ஒரு மாபெரும் புரட்சியை அங்கிருந்து கட்டமைக்க முடியும்.

banner

Related Stories

Related Stories