வைரல்

“முதலாளி சொல்வதை இந்த வேலைக்காரன் கேட்கிறேன்” : எம்.எம். அப்துல்லா செய்த நெகிழ்ச்சி சம்பவம் !

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் FASTag சேவைக்கான குறைந்தபட்ச கட்டாய நிதி இருப்பை ரத்து செய்யக்கோரி இன்று மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு பேசினார் எம்.எம். அப்துல்லா

“முதலாளி சொல்வதை இந்த வேலைக்காரன் கேட்கிறேன்” : எம்.எம். அப்துல்லா செய்த நெகிழ்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காதில் வாங்காத ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனங்களை இருஅவைகளிலுமே பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் FASTag சேவைக்கான குறைந்தபட்ச கட்டாய நிதி இருப்பை ரத்து செய்யக்கோரி இன்று மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு பேசினார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, இத்தகைய கோரிக்கையை முகநூல் பக்கத்தில் ராகேஷ் என்பவர் கடந்த ஜூன் மாதம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “டோல் கட்டணம் fast tag மூலமா எடுக்கிறது நல்லது ஆனா அதுல மினிமம் பாலன்ஸ் இருக்கனுங்கற விதி என்னத்துக்கு?

அரக்கோணம் பக்கம் போகனும்ன்னா மப்பேடு பேரம்பாக்கம் வழிய போவேன் நேத்திக்கு அப்படி போகும் போது வழில பிளான் மாறி காஞ்சிபுரம் போய்ட்டு ஒரு வேலை முடிச்சு போலாம்னு முடிவானதால ஸ்ரீபெரும்புதூர் டோல் வழிய போக வேண்டிய நிலை.

டோல் போன கேஷ் லேன் மூடி இருந்தது. நார்மல் லேன் போனா பாலன்ஸ் இல்ல, 100 ரூபாய் இருக்கு டோல் 50 தான் ஆனா மினிமம் பாலன்ஸ் இருக்கணும் சொல்றாங்க. சரி காசு குடுத்தா 100 ரூபாய் ஏன் டபுள் சார்ஜ் கேட்டா fast tag லேன் சொன்னாங்க. நீங்க தான் கேஷ் லேன் மூடி வெச்சிருக்கீங்க சொன்னா எல்லாம் கேஷ் லேன் தான் பதில். ரெ

ரெண்டு மாசம் முன்னாடி நண்பன் வண்டில போகும்போதும் அவன் வண்டில டேக் இல்லாம ரிட்டன் கேட்டு வாங்கினேன் 100 ரூபாய் . திரும்ப வரும்போது தான் தெரியும் அது ஒரு வழிக்கு மட்டும்ன்னு.

ரெண்டு முறையும் குழந்தை குடும்பம் எல்லாம் போனதால எந்த விவாதமும் இல்லாம வந்தாச்சு.

முன்னாடி ரோட் சரி இல்லாம காசு குடுக்க மாட்டேன்னு பேசி புகார் தந்து காசு குடுக்கமா வந்திருக்கேன். பூந்தமல்லி டூ காஞ்சிபுரம் டோல் வாங்க இல்ல நெடுஞ்சாலை பயணத்துக்கே தகுதி இல்லாத ஒரு மாவட்ட சாலை அளவுக்கு கூட இல்லாத தரமற்ற சாலை. அதுல இப்போ 6 லேன் வேலை வேற நடக்குது அதுல பல டைவெர்ஷன். அவங்களே சாலை வேலை நடப்பதால் சிரமத்திற்கு வருந்துகிறோம் சொல்றாங்க. அப்போ ஏன் காசு வாங்கணும்.

எம்.எம். அப்துல்லா, எம்.பி. டாக்டர் செந்தில் குமார் அண்ணா இதை தேசிய நெடுஞ்சாலை துறை கவனத்திற்கு கொண்டு போய் தீர்வு காண உதவி செய்யவும் இந்த 6 லேன் வேலை முடியும் வரை ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுதிரம் டோல் கட்டணம் வசூலிக்கமால் இருப்பது தான் ஞாயம்.” என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அப்போது அதுதொடர்பாக பதில் அளித்த எம்.எம். அப்துல்லா எம்.பி, “கொஞ்சம் பெரிய பிரச்சனைதான்! இதைப் பத்தி நான் டெல்லில பேசுறேன். ( நிஜமாதான்.. கவுண்டர் மாதிரி இல்லை.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த பிரச்சனையை மாநிலங்களவையில் கொண்டுச் சென்று இதுதொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசியது பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே முந்தைய கோரிக்கை பதிவை சுட்டிக்காட்டு, “சொன்னதை செய்வோம் . ஒன்னரை மாசம் முன்னாடி fast tag மினிமம் பாலன்ஸ் பத்தி ஒரு போஸ்ட் போட்டு அண்ணனை டேக் செஞ்சிருந்தேன். அதை டெல்லில பேசுறேன்னு சொன்னாரு. சொன்னபடியே இன்னைக்கு பேசிருக்காரு.

சாமானியன் கேள்விக்கு செவி மடுக்கும் கழகம். அது மட்டுமில்லாம அதை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கவையில் சாமானியனின் குரலாய் பதிவு செய்த அண்ணன்எம்.எம். அப்துல்லா எம்.பி.க்கு நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு எம்.எம். அப்துல்லா எம்.பி., வெளியிட்டுள்ள பதிவில், ”ஒரு வேலைக்காரன் தனது முதலாளி பேச்சைக் கேட்பதில் என்ன ஆச்சர்யம்!?” என பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories